'டெல்லி மாடல் வளர்ச்சி..' தலைநகருக்கு வெளியே தலைதூக்குமா ஆம் ஆத்மி.. 2022இல் சாதிப்பாரா கெஜ்ரிவால்
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியைத் தாண்டி தனது இருப்பை வலுப்படுத்த இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஊழலை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் கடந்த 2012இல் டெல்லியில் தொடங்கப்பட்ட கட்சி ஆம் ஆத்மி! இதை முழக்கத்தைக் கொண்டு ஏகப்பட்ட கட்சிகள் தொடங்கப்பட்டிருந்தாலும் ஆம் ஆத்மியால் மட்டுமே மக்கள் மனத்தை, குறைந்தது டெல்லிவாசிகளை, வெல்ல முடிந்தது.
2014க்கு பிறகு கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் பாஜக அலையே வீசியது. அப்போது கூட டெல்லியில் ஆம் ஆத்மியை யாராலும் வெல்ல முடியவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால்
இதற்கு ஒரே காரணம் - ஆம் ஆத்மியின் நிறுவனத் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். கட்சி தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் 2013இல் டெல்லி சட்டசபைத் தேர்தலில் 28 இடங்களை வென்று 2ஆவது பெரிய கட்சியாக அமைந்தது. காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்த போதிலும், அந்த அரசு 2 ஆண்டுகள் மட்டுமே நீட்டித்தது. அதன் பிறகு 2015 மற்றும் 2020 ஆண்டுகளில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி என்பது பிரம்மாண்டமானது. இடையில் ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும், கட்சியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

மற்ற மாநிலங்கள்
டெல்லி கட்சி என்ற முத்திரையை ஒழித்துப் பிற மாநிலங்களிலும் வளர வேண்டும் என ஆம் ஆத்மி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு இதுவரை சரியான வெற்றி கிடைக்கவில்லை என்ற போதிலும் இந்த 2022 ஆம் ஆத்மிக்கு ஒரு பூஸ்ட் தரலாம். உத்தரப் பிரதேசம் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், இதில் கட்சியின் இருப்பை வலுப்படுத்திக் கொள்ள ஆம் ஆத்மிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

5 மாநில தேர்தல்
இதை மட்டும் ஆம் ஆத்மி செய்துவிட்டது என்றால், திரிணாமுல், பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் செய்ய முடியாத ஒன்றை ஆம் ஆத்மி சாதித்துக் காட்டிவிடும். பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மாநிலங்களில் ஆம் ஆத்மியின் பிரசார ஸ்டைல் ஒன்று தான். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பிரசாரம் நடைபெறும், 'கெஜ்ரிவாலின் உத்தரவாதம்', என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும். டெல்லி மாடல் வளர்ச்சி என்ற கோஷத்துடன் இது மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் எடுத்துச் செல்லப்படும். உபி-இல் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் தலைமையில், பிரசாரம் நடக்கிறது.

பஞ்சாப்
இந்த 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது பஞ்சாப் தான். அங்கு ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சிக்கு வலுவான இருப்பு உள்ளது. கடந்த 2017இல் முதல்முறையாகக் களமிறங்கிய போதே, அங்கு 2ஆவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்தது. தற்போது பஞ்சாபில் எதிர்க்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது. அங்குக் காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகாலி தளம்-பிஎஸ்பி, அமரீந்தர் சிங் -பாஜக எனப் பல முனை போட்டி நிலவுகிறது.

ஆம் ஆத்மி அலை
சமீபத்தில் நடைபெற்ற சண்டிகர் மாநகர தேர்தலில் கூட ஆம் ஆத்மி அதிக இடங்களை (12) பெற்றது. பாஜக 2ஆம் இடத்திற்கும் காங்கிரஸ் 3ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டன. இந்தத் தேர்தல் முடிவுகள் முக்கியமானதாக அரசியல் வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர். ஏனென்றால் பஞ்சாப் மற்றும் ஹரியானா என 2 மாநிலங்களில் தலைநகராக சண்டிகர் உள்ளது. பஞ்சாபில் காங். ஆட்சியும், ஹரியானாவில் பாஜக ஆட்சியும் நடைபெறுகிறது. இருப்பினும், 2 கட்சிகளையும் தாண்டி ஆம் ஆத்மிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

என்ன நடக்கும்
டெல்லி கட்சி எனத் தொடர்ந்து முத்திரை குத்தப்படும் ஆம் ஆத்மிக்கு இந்த வெற்றி முக்கியமானது. வரும் காலங்களில் ஆம் ஆத்மி நிகழ்த்தவுள்ள அசுர பாய்ச்சலின் தொடக்கம் இது என அக்கட்சியினர் குறிப்பிடுகின்றனர். 3 நாள் பயணமாக தற்போது பஞ்சாப் சென்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலும் அதையே மக்களிடம் எடுத்துச் செல்கிறார். அகாலி தளத்தின் மீதான மோசமான இமேஜ் இன்னும் சரியாகவில்லை. பாஜக - அமரீந்தர் சிங் கூட்டணியை மக்கள் விரும்பவில்லை, காங்கிரசும் குழப்பத்தில் உள்ளதால் சரியாக வேலை செய்தால் பஞ்சாபில் அடுத்த ஆளும் கட்சியாக வர ஆம் ஆத்மிக்கு வாய்ப்புகள் அதிகம் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்

கோவா
அடுத்து கோவாவை பொறுத்தவரை அங்கு பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே தான் நேரடி போட்டி! சமீபத்தில் தான் காங். கட்சியின் 15 எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகினர். அதில் பெரும்பாலானோர் பாஜக பக்கம் ஐக்கியமாகினர். கோவா-இல் காங்கிரஸ் மிகவும் பலவீனமாக மாறி வரும் நிலையில், அங்கு மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு ஆம் ஆத்மி வாய்ப்பாக அமைகிறது. அங்கு அதிக மக்கள் தொகையைக் கொண்ட பண்டாரி சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வர் வேட்பாளராகவும் , கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்தவரைத் துணை முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. இதுவும் அக்கட்சிக்குக் கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

மற்ற மாநிலங்கள்
உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், கர்னல் அஜய் கொத்தியாலை முன்னிறுத்தித் தேர்தல் பணிகளை ஆம் ஆத்மி தொடங்கியுள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ஆம் ஆத்மிக்கு வலுவான தொண்டர் படை இல்லையென்றாலும் கூட தேர்தலில் போட்டியிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு இறுதியில் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் நேரடியாக பாஜக எதிர்க்க முடியும் என்பதால் ஆம் ஆத்மி அங்கும் களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சாதிக்குமா ஆம் ஆத்மி
எல்லாம் சரியாக நடந்தால், இந்த ஆண்டில் டெல்லியை தாண்டி வளர ஆம் ஆத்மிக்கு சிறப்பான வாய்ப்பு அமைந்துள்ளது. இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் குறைந்தபட்சம் 2 மாநிலங்களில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது. இந்த அசாதாரண இலக்கை அரவிந்த் கெஜ்ரிவால் படை எப்படி சாத்தியமாக்கப் போகிறது என்பதை அரசியல் விமர்சகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கூட கூர்மையாகக் கவனித்து வருகின்றனர்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications