"அமரன்" முகுந்த் வரதராஜனின் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பற்றி தெரியுமா! எல்லையின் ரியல் ஹீரோஸ்! புல்லரிக்குதே
டெல்லி: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் ரியல் லைஃப் ஹீரோ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை விளக்கும் இந்த படம் ஆர்ஆர் என்று அழைக்கப்படும் ராஷ்டிரிய ரைபிள்ஸ் குறித்தும் விளக்கப்பட்டு இருக்கிறது.. இந்த ராஷ்டிரிய ரைபிள்ஸ் யார்.. இவர்கள் வரலாறு, மிஷன் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ராஷ்டிரிய ரைபிள்ஸில் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் மிஷன் ஒன்றின்போது உயிரிழந்தார். இருப்பினும், அந்த மிஷனிலும் கூட அவர் பல முக்கிய பயங்கரவாதிகளைக் கொன்று, பல அப்பாவி மக்களை மீட்டு இருந்தார்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை விளக்கும் படமாகவே சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் வந்துள்ளது. அவர் பணியாற்றி ராஷ்டிரிய ரைபிள்ஸ் குறித்தும் அந்த படையின் வரலாறு, சாதனைகள் குறித்தும் நாம் பார்க்கலாம்.
எப்போது: ஆர்ஆர் என்று அழைக்கப்படும் ராஷ்டிரிய ரைபிள்ஸ் என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரத்தின் கீழ் வரும் இந்திய ராணுவத்தின் ஒரு அங்கம் ஆகும். 1980களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்தது. அங்கிருந்த உள்ளூர் போலீசார் மற்ற துணை ராணுவப் படையினரால் இந்த பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதையடுத்து கடந்த 1990ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த விபி சிங்கின் அரசு தான் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
தொடக்கத்தில் இந்த படையில் 36 பட்டாலியன்கள் மற்றும் 5,000 வீரர்கள் இருந்தனர். தொடக்கத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும், பிறகு ஆர்ஆர் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டது. ஆரம்பக் காலத்தில் பஞ்சாபில் ஏற்பட்ட காலிஸ்தான் கிளர்ச்சியின் போது ஆர்ஆர் படைகள் பயன்படுத்தப்பட்டன. காலிஸ்தான் பிரிவினைவாதிகளைக் கட்டுப்படுத்துவதில் ஆர்ஆர் வீரர்களுக்கு மிகப் பெரிய பங்கு இருந்தது. பஞ்சாபில் நிலைமை சீரான உடன் அவர்கள் ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பப்பட்டனர். இன்று வரை அங்கு ஆர்ஆர் வீரர்கள் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
விருதுகள்: ராஷ்டிரிய ரைபிள்ஸ் ஆரம்பிக்கப்பட்டு வெறும் 8 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கேலண்ட்ரி விருதுகளுடன் இந்திய ராணுவத்தின் மிக முக்கியமான கிளையாக ஆர்ஆர் மாறியிருந்தது. இதுவரை ராஷ்டிரிய ரைபிள்ஸ் வீரர்கள் தங்களின் வீரதீர செயல்களுக்காக 6 அசோக சக்ரா, 34 கீர்த்தி சக்ரா, 221 சௌர்ய சக்ரா மற்றும் 1508 சேனா பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
நோக்கம்: ராஷ்டிரிய ரைஃபிள்ஸின் முதன்மை நோக்கமே பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதும் இயல்புநிலையை மீட்டெடுப்பதும் தான். ஆர்ஆர் படை எப்போதும் தங்கள் மிஷன்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் ஜம்மு & காஷ்மீர் போலீசார் உள்ளிட்ட பிற பாதுகாப்புப் படைகளுடன் இணைந்தே பணியாற்றுவார்கள்.
தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் களத்தில் உள்ள ராஷ்டிரிய ரைபிள்ஸ் வீரர்கள், அங்குத் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவது, உளவுத் தகவல்களைச் சேகரிப்பது உள்ளிட்டவை தான் ஆர்ஆர் வீரர்களின் முக்கிய பணியாகும். இதற்காகக் கொரில்லா போர் முறை, ஜங்கிள் போர் முறை மற்றும் அர்பன் போர் முறை ஆகியவற்றில் அவர்கள் சிறப்புப் பயிற்சிகளைப் பெறுகிறார்கள்.
மக்களுடன் மக்களாக: அமரன் படத்தில் விளக்கப்பட்டதை போலவே ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவுகள் உள்ளூர் மக்களுடன் நெருக்கமாக இணைந்து அவர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றே பணியாற்றுவார்கள். இதனால் தீவிரவாதிகளின் தகவல்களை எளிதாகத் தெரிந்து கொண்டு அதை முறியடிக்க முடிகிறது. சில நேரங்களில் அவர்கள் உளவு சேகரிக்க மக்களுடன் மக்களாகவும் இருக்க வேண்டி இருப்பதால் தாடி, முடி உள்ளிட்டவற்றில் மற்ற ராணுவ பிரிவுகளைப் போலக் கட்டுப்பாடுகள் இருக்காது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த பல தீவிரவாதிகளை வெற்றிகரமாக காலி செய்ததில் ராஷ்டிரிய ரைஃபிள்ஸுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. காஷ்மீரில் முழுமையாக அமைதி தீரும் வகை அங்கு ராஷ்டிரிய ரைஃபிள்ஸின் பணி தொடரவே செய்யும்.












Click it and Unblock the Notifications