வாகன ஓட்டிகளே அலர்ட்.. மத்திய அரசு கொண்டு வரும் விதி.. மீறினால் ரூ.1,000 அபராதம்
டெல்லி: காரில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்வதை உறுதி செய்யும் விதமாக புதிய முடிவு ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கையில் எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த விதிகள் கட்டாயமாக உள்ளது.
கார்கள் விபத்துக்குள்ளாகும் போது சீட் பெல்ட் அணியாமல் இருப்பதே உயிரிழப்பு ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. இதனால் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது. அது மட்டும் இன்றி பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றும் அரசு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி தற்போது அனைத்து கார்களிலும் பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களும் சீட் பெல்ட் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் இந்த சீட் பெல்ட் அணியாமலே பயணிக்கிறார்கள். விபரீதம் புரியாமல் பயணிகள் இப்படி அஜாக்கிரதையாக பயணிக்கும் போது கார்கள் விபத்துக்குள்ளாகும் போது பின் படுகாயம், உயிரிழப்பு ஆகியவை ஏற்படுகிறது.
அலாரம் ஒலிக்கும்: இதனால், பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளும் சீட் பெல்ட் அணிந்து செல்வதை உறுதி செய்யும் விதமாக அலாரம் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய சாலை போக்குவர்த்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, தற்போது கார் டிரைவர் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் அணியாவிட்டால் இந்த அலாரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
கார்களில் கட்டாயம்: பயணிகளை கார் சீட் பெல்ட் அணிவதை நச்சரிக்கும் விதமாக இந்த அலாரம் இருக்கும். இதனால், சீட் பெல்ட்களை பெரும்பாலான பயணிகள் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது. இதே வசதியை பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் இந்த அலாரம் எழுப்புவதை கட்டாயம் ஆக்க உள்ளது. வரும் ஏப்ரல் 2025 ஆம் ஆண்டு முதல் புதிதாக விற்பனைக்கு வரும் கார்களில் இந்த வசதியை ஏற்படுத்துவது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூ.1,000 அபராதம்: அதன்பிறகு சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்தால் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும். பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பயணிகள் சீட் பெல்ட் அணியாவிட்டாலும் மோட்டார் வாகன சட்டம் 138-ன் கீழ் ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம். ஆனால், இது பெரும்பாலான பயணிகள் இதைப்பற்றி அறிந்து இருக்கவில்லை. போக்குவரத்து போலீசார் கூட இதை பெரிதாக கண்டு கொள்வது இல்லை.
இதனால், கார்களில் பெரும்பாலும் பல பயணிகள் பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாமல் செல்வதையே காண முடிகிறது. எனவே, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் சீட் பெல்ட் அணியாவிட்டால் பீஃப் சவுண்ட் எச்சரிக்கை விடுக்கும் அலாரம் கண்டிப்பாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பொருத்த வேண்டும் என்ற விதியை கட்டாயம் ஆக்கியுள்ளது மத்திய அரசு
சாலை விபத்துக்கள் அதிகம்: உலக அளவில் சாலை விபத்துக்களால் அதிகம் உயிரிழப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. சாலை விபத்துக்கள் ஏற்பட வாகன ஓட்டிகளின் அலட்சியம், சாலை போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்டவையே விபத்துக்கான முக்கியமான காரணங்களாக உள்ளன. எனவே, சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக கார்கள் விபத்துக்குள்ளாகும் போது சீட் பெல்ட் அணியாமல் இருப்பதே உயிரிழப்பு ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. இதனால் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications