US Tax: இந்தியாவுக்கு அமெரிக்கா வரியை குறைத்தது ஏன்? டிரம்ப் முடிவுக்கு என்ன காரணம்?
டெல்லி: அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. இந்த வரி குறைப்பு முடிவுக்கு என்ன காரணம் எனப் பார்க்கலாம்.
அமெரிக்கா இந்தியா மீது கடந்த ஆண்டு 25% முதல் 50% வரை வரி உயர்த்தியது. அதற்கு முக்கிய காரணம், இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி இறக்குமதி செய்ததுதான். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரின்போது உலகளவில் பொருளாதாரத்தில் பல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது மேலும், ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், உக்ரைனுக்கு அதரவு தெரிவித்தன.

அமெரிக்கா வரி விதிப்பு
இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் எண்ணெய் கொள்முதல் செய்தது. இதற்கு அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனையடுத்து தங்களது எதிர்ப்பை மீறி கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்து வரும் காரணத்தால் 50 சதவீதம் வரி விதிக்கும் நடவடிக்கையை எடுத்தது அமெரிக்கா.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் வாங்கும் ஒப்பந்தத்திற்கு பிறகு, வரி 25% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். பரஸ்பர வரி 25%லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்காது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளதால், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக விதிக்கப்பட்ட கூடுதலான 25% வரியும் நீக்கப்படுவதாகத் தெரிகிறது.
வரி குறைப்பு முடிவு
இந்தியா - அமெரிக்கா இடையே இந்த வர்த்தக ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொண்டதற்கான முதன்மையான காரணம், மோடி "ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவிலிருந்தும், வெனிசுலாவிலிருந்தும் இன்னும் அதிகமாக வாங்கவும் ஒப்புக்கொண்டார்" என்பதே. "இது உக்ரைனில் இப்போது நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும், ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மோடி தன்னிடம் ஒரு கோரிக்கையை வைத்ததாகவும், அதனால்தான் "உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம், இதன் மூலம் அமெரிக்கா குறைக்கப்பட்ட பரஸ்பர வரியை வசூலிக்கும், அதை 25% இலிருந்து 18% ஆகக் குறைக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
காரணங்கள்
பிரதமர் மோடி ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து அதிகம் வாங்குவதாக உறுதியளித்தார். இது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உதவும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா அமெரிக்க ஆற்றல், எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்ளிட்ட பொருட்களுக்கு 500 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யும் வகையில் Buy American கொள்கையில் உடன்பாடு எடப்பட்டுள்ளது.
இந்தியா தனது அமெரிக்க பொருட்களுக்கான வரிகள் மற்றும் தடைகளை பூஜ்யம் ஆக்குவதாக ஒப்புக்கொண்டு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக டிரம்ப் இந்த வரி குறைப்பு முடிவை எடுத்துள்ளார்.
-
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தாண்டவமாடும் ஈரான்.. அமெரிக்காவின் எண்ணெய் கப்பல் மீது கொடூர தாக்குதல்.. கலக்கத்தில் உலக நாடுகள் -
ஈரானை ஏமாற்றிய இந்திய மாலுமி.. ஹார்முஸ் ஜலசந்தியை தந்திரமாக கடந்து மும்பை வந்து சேர்ந்தது எப்படி? -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
உள்நாட்டிலேயே கேஸ் இல்லாத போது.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி படுஜோர்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு -
கைவிரித்த வெளியுறவுத்துறை.. இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி கொடுத்ததா? - பெரிய ட்விஸ்ட் -
அடுத்து லாக்டவுன் தானா? அப்படியே கொரோனா மாதிரி.. முதலில் கேஸ் சப்ளை, இப்போ ஹோட்டல் மூடல்.. திக்திக் -
கிட்ட வந்த ஆசாமி.. மாஜி முதல்வர் மீது துப்பாக்கி சூடு.. NSG செய்த செயலால் நூலிழையில் தப்பினார்!












Click it and Unblock the Notifications