Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி தேர்தல் ரிசல்ட்: காங்கிரஸை கைவிட்ட சிறுபான்மையினர்? ஓக்லா தொகுதிதான் உதாரணம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியை 15 ஆண்டுகள் ஆட்சி செய்த அனுபவம் கொண்டிருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. சிறுபான்மையினர் வாக்குகளை தவறவிட்டதுதான் இதற்கு முக்கிய காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

டெல்லி தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் தாமதமாகத்தான் பிரசாரத்தை தொடங்கியது. பிரசாரத்தின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரின் பெயர்கள் இருந்தது. ஆனால் அவர்கள் பிரசாரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மக்கள் மத்தியில் எடுபடவில்லை. குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகளை அது ஈர்க்கவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

delhi election 2025 delhi election result 2025 arvind kejriwal 2025 2025

ஓக்லா, சீலம்பூர், பாபர்பூர், முஸ்தபாபாத், மதியா மஹால், பல்லிமறன், சாந்தனி சௌக், கஸ்துபாநகர், பட்லி, புது தில்லி, நங்லோய் ஜாட், சத்தர்பூர் மற்றும் பட்பர்கஞ்ச் ஆகிய தொகுதிகளில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகம். இந்த தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதும் இவர்கள்தான். இதனை புரிந்துக்கொண்ட ஆம் ஆத்மி தனது தேர்தல் வியூகத்தை அதற்கேற்றார் போல மாற்றி அமைத்து தேர்தலை சந்தித்தது.

ஆனால் காங்கிரஸ் கவனம் சிறுபான்மையினர் மட்டுமல்லாது, பூர்வாஞ்சல் மக்கள் மீதும் இருந்தது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து வந்து, டெல்லியில் வசித்து வரும் மக்கள்தான் பூர்வாஞ்சல் மக்கள். மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 35ல் வெற்றி தோல்வியை இவர்களது வாக்குகள்தான் தீர்மானிக்கிறது. எனவே இதனை கவர் செய்தால் போதும் என்கிற ரீதியில் காங்கிரஸ் வியூகம் அமைத்திருந்தது. ஆனால் அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

இதற்கு மற்றொரு காரணம் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு, பாஜக வலுவாக எதிர் பிரசாரம் செய்ததுதான். இந்தியா என்பது நாடு கிடையாது. அது மாநிலங்களின் ஒன்றியம் என்று ராகுல் காந்தி பேசி வருகிறார். ஆனால், நமது கொடியும், தேசிய கீதமும் இந்தியாவை ஒரு நாடு என்றுதான் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இதை ராகுல் உடைக்க பார்க்கிறார். அவருக்கு இந்தியா ஒரு நாடாக இருப்பது பிடிக்கவில்லை என்று பாஜக எதிர் பிரசாரத்தை தொடங்கியது.

இப்படி இரு தரப்பும் சண்டை செய்துக்கொண்டிருக்கையில், ஆம் ஆத்மி சைலன்ட்டாக தனது அரசியலை முன்னடுத்து சென்றது. விளைவு, பாஜக எதிர்ப்பு வாக்குகள் காங்கிரஸுக்கு பதில் ஆம் ஆத்மிக்கு விழுந்தன. குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகள் ஆம் ஆத்மிக்குதான் அதிகமாக விழுந்தது. இது ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸின் கனவுக்கு தீ வைத்தது.

தற்போது டெல்லி தேர்தலில் பதிவான வாக்ககள் எண்ணப்பட்டு வருகின்றன. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஓக்லா தொகுதியை பொறுத்தவரை காலை 10 மணி நிலவரப்படி, காங்கிரஸின் இளம் வேட்பாளர் அரிபா கான், வெறும் 475 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்.

மறுபுறம் பாஜக வேட்பாளர் 4,955 வாக்குகளையும், ஆம் ஆத்மியின் சிட்டிங் எம்எல்ஏவும், வேட்பாளருமான அமானதுல்லா கான் 2,695 வாக்குகளையும் பெற்றிருக்கிறார். இது காங்கிரஸின் தேர்தல் யுக்தி தோல்வியை காட்டுவதாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+