Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெஜ்ரிவாலுக்கு எதிராக களமிறங்கும் இரு மாஜி முதல்வர்களின் வாரிசுகள்.. டெல்லி தேர்தலில் பெரிய செக்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் இப்போது சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள நிலையில், பாஜக & காங்கிரஸ் கட்சிகள் எதிர்த்துப் போட்டியிடுகின்றன. இதற்கிடையே அங்கு வேட்புமனு தாக்கலுக்குக் கடைசி நாள் முடிந்துவிட்ட நிலையில், மொத்தம் 719 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக வேட்பாளர்கள் எங்கு உள்ளனர். குறைந்தபட்ச வேட்பாளர்கள் எந்த தொகுதியில் களமிறங்குகிறார்கள் என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ள சூழலில், அங்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

delhi election 2025 delhi arvind kejriwal 2025

டெல்லி தேர்தல்:


டெல்லியைப் பொறுத்தவரை இப்போது ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் அதிஷி முதல்வராக இருக்கிறார். ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே தான் அங்கு கடும் போட்டி இருக்கிறது. டெல்லி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஜனவரி 17ம் தேதி இறுதி நாளாகும். நேற்றைய தினம் (ஜனவரி 18) வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது.


களத்தில் 719 வேட்பாளர்கள்:


இதற்கிடையே டெல்லி தேர்தலில் மொத்தம் 719 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1100க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் வேட்புமனுக்களில் மொத்தம் 477 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கடைசியாக மொத்தம் 719 வேட்பாளர்கள் டெல்லி தேர்தலில் களத்தில் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகத் தான் அதிகம்:


அதிகபட்சமாக புது டெல்லி சட்டமன்றத் தொகுதியில் 23 பேர் போட்டியிடுகிறார்கள். அங்கு மொத்தம் 29 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் 23 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. இந்த புது டெல்லி தொகுதியில் தான் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக டெல்லி முன்னாள் முதல்வர்கள் இருவரின் மகன்கள் போட்டியிடுகிறார்கள். அதாவது பாஜக சார்பில் பர்வேஷ் வர்மா (மாஜி முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன்) மற்றும் காங்கிரஸின் சந்தீப் தீட்சித் (மாஜி முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன்) போட்டியிடுகிறார்கள்.

குறைந்த வேட்பாளர்கள்:


அதேபோல படேல் நகர் மற்றும் கஸ்தூர்பா நகர் ஆகிய தொகுதிகளில் குறைந்தபட்சமாக 5 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். கஸ்தூர்பா தொகுதியில் 6 பேர் வேட்புமனு செய்த நிலையில், அதில் 5 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. அங்கு ஆம் ஆத்மி சார்பில் ரமேஷ் பஹல்வானும், பாஜக சார்பில் நீரஜ் பசோயாவும், காங்கிரஸ் சார்பில் அபிஷேக் தத்தும் போட்டியிடுகின்றனர்.

மேலும், படேல் நகர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் பவேஷ் ரதன் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக பாஜக சார்பில் ராஜ் குமார் ஆனந்த் களமிறங்குகிறார். இதற்கு முன்பு ஆம் ஆத்மியில் இருந்த ஆனந்த், 2022- 2024 வரை டெல்லி அமைச்சராகவும் இருந்துள்ளார். அதேபோல காங்கிரஸ் சார்பில் கிருஷ்ண தீரத். இவர் 2009-2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு வேட்புமனுவை வாபஸ் பெற நாளை ஜனவரி 20ம் தேதி கடைசி நாளாகும். எனவே, பலர் தங்கள் வேட்புமனுக்களையும் வாபஸ் பெறலாம் எனக் கூறப்படுகிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+