குட் நியூஸ்! வறுமை ஒழிப்பில் இந்தியா செய்த வேற லெவல் ரெக்கார்ட்! 15 ஆண்டுகளில் 41 கோடி பேர் மீட்பு!
டெல்லி: கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் சுமார் 41.5 கோடி மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றி இந்தியா ஒரு மகத்தான சாதனையைப் படைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐநாவின் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி இணைந்து சர்வதேச வறுமைக் குறியீடு என்ற ரேங்கிங்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா உட்பட 25 நாடுகள் கடந்த 15 ஆண்டுகளில் அதிகபட்ச நபர்களை வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருந்து மீட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. கம்போடியா, சீனா, காங்கோ, ஹோண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, மொராக்கோ, செர்பியா மற்றும் வியட்நாம் நாடுகள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருந்து பலரை மீட்டுள்ளது.

இந்தியா: கடந்த ஏப்ரல் மாதம் 142.86 கோடி மக்களுடன் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகச் சீனாவை இந்தியா ஓவர்டேக் செய்தது. இதற்கிடையே வறுமை நிலையில் இருந்து மக்களை வெளியே கொண்டு வருவதில் இந்தியா மகத்தான சாதனையைச் செய்துள்ளதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில்\ மட்டும் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வறுமை குறைப்பு என்பது அடையக் கூடிய ஒன்று என்பதை இது நிரூபித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்டவற்றை மதிப்பிடச் சரியான தரவுகள் இல்லாததால் தற்போதைய துல்லியமான சூழலைக் கணிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த 2005 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 41.5 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மாபெரும் சாதனை: இந்த காலகட்டத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருந்தவர்களின் நிலை 55.1 சதவீதத்திலிருந்து 16.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2005இல், இந்தியாவில் சுமார் 64.5 கோடி மக்கள் மல்டி டைமன்ஷனல் வறுமைக் கோட்டில் இருந்தனர். பணம், கல்வி, போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதே மல்டி டைமன்ஷனல் வறுமைக் கோடு என்று அழைக்கப்படும். இந்த எண்ணிக்கை 2015இல் 37 கோடியாகவும் 2019-2021 காலகட்டத்தில் 23 கோடியாகவும் குறைந்துள்ளது.
அனைத்து குறியீடுகளிலும் இந்தியாவில் இருந்த வறுமையும் பற்றாக்குறையும் குறைந்துள்ளது. பல பரிமாணங்களில் இந்தியாவில் நிலைமை முன்னேறி இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
குறைபாடு: ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது 2005/2006இல் 44.3%ஆக இருந்த நிலையில், 2019/2021இல் 11.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும் குழந்தை இறப்பு விகிதமும் 4.5%இல் இருந்து 1.5%ஆகக் குறைந்துள்ளது. சமையல் எரிபொருளைப் பெற முடியாத சூழலில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் 52.9%இல் இருந்து 13.9%ஆக குறைந்துள்ளது. அதேபோல போதிய சுகாதாரம் வசதிகள் இல்லாதோரின் எண்ணிக்கையும் கடந்த 15 ஆண்டுகளில் 50.4%இல் இருந்து 11.3%ஆகக் குறைந்துள்ளது.
முறையான குடிநீர் இணைப்புகளைப் பெறாதவர்களின் எண்ணிக்கையும் 16.4%இல் 2.7%ஆகக் குறைந்துள்ளது. இதேபோல மின்சாரம் (29%இல் இருந்து 2.1%) மற்றும் வீட்டுவசதி (44.9%இல் இருந்து 13.6%) என்று அனைத்திலும் இந்தியா கடந்த 15 ஆண்டுகளில் வெகுவாக முன்னேறி இருக்கிறது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 17 நாடுகள் வறுமை சூழலை 25%க்கு மேல் குறைத்துள்ள நிலையில், இந்தியா மற்றும் காங்கோ நாடுகள் இதை 50% மேல் குறைத்துள்ளன.
எங்கே அதிகம்: உலகெங்கும் உள்ள மக்களில் 110 கோடி பேர், அதாவது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 18% பேர் மல்டி டைமன்ஷனல் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கிறார்கள். இவர்கள் மொத்தம் 110 நாடுகளில் உள்ளனர். அதிகபட்சமாக சப்-சஹாரா ஆப்பிரிக்கா பகுதியில் 50 கோடி பேரும் தெற்காசியாவில் 38 கோடி பேரும் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள்.
அதாவது உலகில் வறுமைக் கோட்டில் இருக்கும் 6 பேரில் 5 பேர் இந்த பகுதிகளில் தான் உள்ளனர். மேலும், மூன்றில் இரண்டு பங்கு ஏழைகள் அதாவது 13 கோடி பேர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழ்கின்றனர். எனவே, உலக வறுமையைக் குறைப்பதற்கு இந்த நாடுகளில் செயல்பாடுகள் முக்கியமானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications