கொரோனா 2ஆம் அலை.. நாட்டில் ரெம்டெசிவிருக்கு தட்டுப்பாடு ஏன்? யாருக்கெல்லாம் தேவை? அதிமுக்கிய தகவல்
டெல்லி: நாட்டில் தற்போது ரெம்டெசிவிருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்தை அளிக்க வேண்டாம் என்றும் அது கொரோனா சிகிச்சைக்கான மருந்து இல்லை என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3.49 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் உள்ளிட்ட பல மருத்துவ பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

ரெம்டெசிவிர் தட்டுப்பாடு
அதேபோல ரெம்டெசிவிர் மருந்திற்கும் நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த ரெம்டெசிவிர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கொரோனாவின் தீவிர தன்மையைக் குறைக்க முடிவதாக நம்பப்படுகிறது. ஆனால், அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் இந்த ரெம்டெசிவிர் தேவையில்லை. மோசமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் தேவை,

மருத்துவர் கருத்து
இருப்பினும், அனைவரும் ரெம்டெசிவிரை பயன்படுத்துவதால் அம்மருந்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து டெல்லி மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் நரேஷ் குப்தா கூறுகையில், இது கொரோனா சிகிச்சைக்கான மருந்து இல்லை. வென்டிலெட்டர் உதவியுடன் இருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் பெரியளவு பயன் தருவதில்லை என உலக சுகாதார அமைப்பும் கூறியுள்ளது.

அதிகமாகப் பயன்படுத்துகிறோம்
ரெம்டெசிவிரை எடுத்துக்கொள்வதன் மூலம் ஒருவர் மருத்துவமனைகளில் இருக்க வேண்டிய காலம் மட்டுமே குறைகிறது. அதேநேரம் அனைத்து மருந்துகளைப் போலவே ரெம்டெசிவிருக்கும் பக்க விளைவுகள் உள்ளன. இதன் பக்க விளைவுகள் சில சமயங்கள் உயிரைக் கூட பறிக்கலாம். வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரெம்டெசிவிர் தேவையில்லை. ரெம்டெசிவிர் ஒருவருக்குத் தேவையா இல்லையா என்பதை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். நாம் இப்போது அதிகளவு ரெம்டெசிவிரை பயன்படுத்துகிறோம் என தெரிவித்தார்.

தட்டுப்பாடு ஏன்
கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள், எங்கு ரெம்டெசிவிருக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் அதை முன்னரே வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். தட்டுப்பாடு அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ரெம்டெசிவிர் மருந்தை யாருக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் தேவை.

ரெம்டெசிவிர் உற்பத்தி
நாட்டில் தற்போது ரெம்டெசிவிருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உற்பத்தியை அதிகரிக்க அரசு பல முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம் மே மாதம் ரெம்டெசிவிர் உற்பத்தியை இரட்டிப்பாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் தற்போது 38.80 லட்சம் ரெம்டெசிவிர் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த மாதம் இதை 74 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications