வாடகைக்கு மனைவி வேணுமா? கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு ரூ.2 லட்சத்தில் கன்னி பெண்கள் ரெடி.. நம்ம ஊர்லதான்
டெல்லி: கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு, வாடகைக்கு பெண்கள் கிடைக்கிறார்களாம்.. இதற்காக ரூ. 15,000 முதல் 25,000 வரை அந்தப் பெண்களுக்கு பணம் தரப்படுகிறதாம்.. இதுபோன்ற ஒரு கலாச்சாரம், வெளிநாடுகளில் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது நம்முடைய இந்தியாவிலும் ஆரம்பமாகிவிட்டது. எங்கு தெரியுமா?
தென்கிழக்கு ஆசியாவில் உள்ளது தாய்லாந்து, ஒரு தீவு நாடாகும்.. உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமும்கூட.. கடலால் சூழப்பட்டுள்ள இந்த தாய்லாந்துக்கு, லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்...

வாடகை பெண்கள்: இந்த தாய்லாந்தில், "Wife on Hire" அல்லது "Black Pearl" என்ற நடைமுறை உள்ளது. அதாவது குறிப்பிட்ட பணம் செலுத்தி பெண்களை வாடகை மனைவியாக மாற்றிக்கொள்ளலாம்.. இவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட திருமணங்கள் கிடையாது.
இந்த தற்காலிகத் திருமண ஏற்பாட்டின் மூலம், மனைவியின் பாரம்பரியக் கடமைகள் அனைத்தையும் அந்த பெண் நிறைவேற்ற வேண்டும்... ஆனால், ஒப்பந்த காலத்துக்கு மட்டுமே அந்த பெண் மனைவியாக இருப்பார். இது தாய்லாந்திலுள்ள பல பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மிகவும் உபயோகமாக இருக்கிறதாம். வாடகைக்கு மனைவிகள் இருந்தாலும், சிவப்பு விளக்கு பகுதிகள், பார்கள் மற்றும் இரவு விடுதிகளம் அங்கு அதிகமாக இருக்கிறதாம்.
இரவு விடுதிகள்: இந்த பெண்களில் பலர் பார்கள் அல்லது இரவு விடுதிகளில் வேலை செய்கிறார்கள். இந்த பெண்களின் வயது, அழகு, கல்வி மற்றும் ஒப்பந்தத்தின் காலம் போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து அவர்களுக்கு வழங்கப்படும் பணம் மாறுபடும். அதன்படி 1,600 டாலர் முதல் 116,000 டாலர் வரை வாடகை மனைவிகளுக்கு பணம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
இப்போது விஷயம் என்னவென்றால், இதுபோன்ற ஒருநடைமுறை, நம்முடைய இந்தியாவிலும் இருக்கிறதாம். ஆம், மத்திய பிரதேசம் மாநிலத்திலுள்ள சிவபுரி மாவட்டத்தின் கிராமங்களில், இப்படியொரு நடைமுறை பலவருட காலமாகவே உள்ளது.
விசித்திரம்: "தாதிச்சா பிரதா" என்று இந்த நடைமுறைக்கு பெயர். பெரிய பெரிய பணக்கார ஆண்கள், தங்களுக்கு பிடித்த பெண்களை ஏலத்தில் எடுத்துக் கொள்வார்கள்.. 1 மாதம் முதல் 1 வருடம் வரை, இந்த பணக்கார ஆண்களுக்கு மனைவிகளாக அப்பெண்கள் வாடகைக்கு விடப்படுகிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், இளம் பெண்கள் மட்டுமல்லாமல், மனைவிகளையும் சந்தையில் வாடகைக்கு விடுகிறார்கள். கன்னித்தன்மை, உடல் தோற்றம், வயது போன்றவற்றை வைத்து, பெண்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள்.
8 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட கன்னிப்பெண்களுக்கு முன்னுரிமை தரப்படுவதாகவும், ரூ. 15,000 முதல் 25,000 வரை பணம் தரப்படுவதாகவும, லீகல் சர்வீசஸ் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், அழகான கன்னி பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை ஏலத்தில் கிராக்கி இருக்கிறதாம்.
விமர்சனங்கள்: வாடகை பெண்களுக்கு, ரூ.10 முதல் ரூ.100 வரையிலான பத்திரத்தில் ஒப்பந்தமும் போடப்படுகிறது. ஒப்பந்தம் முடிந்துவிட்டால், பெண்கள் அதை புதுப்பித்துக் கொள்ளலாம். பல பெண்களுக்கு இது வருமானத்தை தருகிறது என்றாலும், இதுவும் ஒருவகையான பாலின சுரண்டல்தான் என்ற விமர்சனம் வெடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications