கர்நாடகா முதல்வர் ஆகிறார் சித்தராமையா.. டி.கே சிவகுமார் துணை முதல்வர்.. சனிக்கிழமை பதவி ஏற்பு!
டெல்லி: கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்க உள்ளனர்.
கடந்த 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் ரிசல்ட் 13ம் தேதி வெளியானது. இதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி கொடி நாட்டி தனிப்பெரும்பான்மையை பெற்றது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதுமானது. இதனையடுத்து முதலமைச்சராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ரேஸில் முன்னாள் முதலமைச்சரும் மூத்த தலைவருமான சித்தராமையாவும், மாநில தலைவரா டி.கே.சிவகுமாரும் இருக்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ்+மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியிலிருந்து 17 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்று பாஜகவில் சேர்ந்துக்கொண்டனர். இதனால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. எனவே இந்த நிலையிலிருந்து கட்சியை மீட்டெடுக்க சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் என இருவரும் கடுமையான உழைப்பை கொடுத்திருக்கின்றனர்.
சிவகுமார் கர்நாடகாவின் ஒக்கலிகா சமூகத்தின் பிரதிநிதியாக பார்க்கப்படுகிறார். பொதுவாக இவர்களின் வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்குதான் செல்லும். ஆனால் இந்த முறை இவர்கள் அதிகம் உள்ள பழைய மைசூரு பகுதியில் காங்கிரஸ் கொடி நாட்டியுள்ளது. அதாவது இவர்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சி பக்கம் திரும்பியுள்ளன. இதற்கு பின்னர் சிவகுமாரின் முயற்சி இருக்கிறது. அதேபோல, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையாவும் ஒரு முக்கியமான தலைக்கட்டுதான்.
என்னதான் டி.கே.சிவகுமார் கடுமையாக வேலை பார்த்திருந்தாலும் அவர் தென் கர்நாடகாவின் லீடராகதான் கருதப்படுகிறார். ஆனால் சித்தராமையா ஒட்டுமொத்த மாநிலம் முழுமைக்குமான தலைவராக இருக்கிறார். மட்டுமல்லாது இவருக்கு தலித், இஸ்லாமியர், குருபர் ஆகிய சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக செல்வாக்கும், சிவகுமாரைவிட அதிக எம்எல்ஏக்களின் ஆதரவும் இருக்கிறது. இப்படி இருவரும் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கின்றனர்.
எனவே இருவரும் தற்போது முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டு வருகின்றனர். இவர்களில் யாரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பது என்று கட்சி மேலிடம் குழம்பியுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு (மே.17) இருவரும் ராகுல் காந்தியையும், பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலையும், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலாவையும் தனித்தனியாக சந்தித்தனர். இந்த சந்திப்பு நள்ளிரவு வரை நீடித்தது. இந்நிலையில் இன்று யார் முதலமைச்சர் என்கிற தகவல் வெளியியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது சித்தராமைய முதலமைச்சராகவும், டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பணியாற்ற இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து வரும் 20ம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இன்று இரவு 7 மணிக்கு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டமும் நடைபெறுகிறது.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சிவகுமார் சிவபெருமான் ஆன கதை.. அப்ப தான் பதவியேற்றார், அதுக்குள்ள கெட்டப்பால் கொந்தளிக்குது கர்நாடகா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே












Click it and Unblock the Notifications