கோலாகலமாக நடந்த முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி.. கலக்கிய டிரோன் ஷோ! கண்கவரும் காட்சிகள்
டெல்லி: தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
நாட்டின் 73ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் கடந்த ஜன. 23ஆம் தேதி நேதாஜி சிலை திறப்பு விழாவுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கடந்த ஜன. 26ஆம் தேதி தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார்.

பாசறை திரும்பும் நிகழ்ச்சி
இதில் முப்படைகள் பங்கேற்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முப்படைகளும் தலைநகருக்கு வந்திருந்தன. இந்நிலையில், தற்போது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் முடிந்துள்ள நிலையில், முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நிறைவடைவது குறிக்கும் இதில் மொத்தம் 26 இசைக்குழுக்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

பாசறை திரும்பும் நிகழ்ச்சி என்றால் என்ன
பொதுவாக போருக்குச் சென்ற படைகள் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்பும் நிகழ்ச்சியைத் தான் பாசறை திரும்பும் நிகழ்ச்சி என்று அழைக்கப்படும். தற்போது குடியரசு தின விழா நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் முப்படைகள் மீண்டும் பாசறை திரும்புகின்றனர். ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமான முறையில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் பல்வேறு படைகளின் இசை அணிவகுப்பு நடைபெறும். இந்த ஆண்டு அதேபோல 20க்கும் மேற்பட்ட பாடல்கள் இந்த இசை அணிவகுப்பில் இடம் பெற்றது

குடியரசு தலைவர்
வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள். ஆனால். இந்த முறை கொரோனா பரவல் காரணமாகக் குறைவான பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைவரான குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
#WATCH | 1000 Made in India drones make different formations as part of the Beating Retreat ceremony at Vijay Chowk, Delhi pic.twitter.com/aSrE5krh0R
— ANI (@ANI) January 29, 2022
டிரோன் நிகழ்ச்சி
இந்த ஆண்டு "மேக் இன் இந்தியா" என்பதைக் கருப்பொருளாக வைத்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்லியில் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்தது. சூரியன் முழுவதும் அஸ்தமனம் ஆன பிறகு 1000 டிரோன்களுடன் சுமார் 10 நிமிடங்களுக்கு நடந்த டிரோன் நிகழ்ச்சி, அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.












Click it and Unblock the Notifications