குடியரசு தின விழா.. 1,132 காவலர்களுக்கு ஜனாதிபதி விருது; தமிழ்நாட்டில் இருந்து பெறும் 24 பேர் யார்?
டெல்லி: குடியரசு தின விழாவை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதாக 1,132 காவலர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து பெறப்போகும் 24 காவலர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் உள்ளிட்ட பதக்கங்கள் அறிவிக்கப்படும்.

காவல்துறை, தீயணைப்புப்பணி, ஊர்க்காவல் படை, குடிமைப்பாதுகாப்பு, சீர்திருத்தப்பணி ஆகிய துறைகளில் 16 பதக்கங்களாக இருந்த நிலையில், சமீபத்திய மறுசீரமைப்புக்கு பிறகு வீரதீரச்செயலுக்கான ஜனாதிபதி பதக்கம், தீரச்செயலுக்கான பதக்கம், சிறப்புமிக்க சேவைக்கான ஜனாதிபதி பதக்கம், மெச்சத்தக்கச் சேவைக்கான பதக்கம் ஆகிய 4 பதக்கங்களாக சிறப்பாக பணியாற்றிய காவல்துறை வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன்படி இந்த ஆண்டு மொத்தம் 1,132 காவலர்களுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வீரதீர செயலுக்கான ஜனாதிபதி பதக்கம் 2 பேருக்கும், வீரதீர செயலுக்கான பதக்கம் 275 பேருக்கும், சிறப்புமிக்க சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் 102 பேருக்கும் வழங்கப்பட இருக்கிறது.
மெச்சத்தக்க சேவைக்கான பதக்கம் 753 பேருக்கும் இன்று டெல்லியில் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 24 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட உள்ளது. அவர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்
தகைசால் பணிக்காக லஞ்ச ஒழிப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி. லலிதா லட்சுமி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை ராஜபாளையத்தை சேர்ந்த தளவாய் ராஜசேகரன், ஈரோடு சிறப்பு அதிரடி படை சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்
மெச்சத்தகுந்த பணிக்கான பட்டியலில் 21 தமிழக காவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. லோகநாதன் - மதுரை போலீஸ் கமிஷனர்.
2. நரேந்திரன் நாயர்- தென்மண்டல ஐ.ஜி., மதுரை.
3. ரூபேஷ்குமார் மீனா- பணி அமைப்பு ஐ.ஜி., சென்னை.
4. அண்ணாதுரை- திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு.
5. செங்குட்டுவன்- திருப்பூர் மாநகர உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர். குற்றப்புலனாய்வு துறை
6. தேவேந்திரன் - வேலூர் குற்றப்புலனாய்வு மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர்.
7. செல்லத்துரை- நீலகிரி திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்.
8. மணி- ராஜப்பாளையம் சிறப்பு காவல் படை இன்ஸ்பெக்டர்.
9. ராஜகோபால்- தஞ்சை குற்ற பிரிவு புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர்.
10. அழகுதுரை- மதுரை சிறப்பு படை உதவி படை தலைவர்.
11. பழனிவேல்- சென்னை குற்றப்புலனாய்வு துறை இணையவழி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்.
12. மோகன்பாபு - சென்னை திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.
13. வெங்கடேசன் - குற்ற புலனாய்வுத்துறை தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்.
14. ராயமுத்து- தேனி குற்றப்புலனாய்வுத்துறை தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்.
15. அனில்குமார்- சென்னை மாநில குற்ற ஆவண காப்பக கம்ப்யூட்டர் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.
16. ஈஸ்வரன் - நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.
17. சாலமோன் ராஜா- ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர்.
18. அருள்முருகன்- நாமக்கல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.
19. குணசேகரன் - சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.
20. சுந்தரம்- சென்னை மாநில குற்ற ஆவண காப்பகம் கம்ப்யூட்டர் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.
21. வெங்கடேசன்- தஞ்சை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.
22. சென்னை மண்டல சி.பி.ஐ. இணை இயக்குனர் வித்யா ஜெயந்த் குல்கர்னி தகைசால் பணிக்காக ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications