உவ்வே.! குப்பையில் கிடந்த உணவை எடுத்து.. நைசாக கஸ்டமருக்கு கொடுத்த ஊழியர்.. பிரபல உணவகத்தில் பகீர்!
டெல்லி: பிரபல உணவகத்தில் குப்பையில் இருந்த பிரெஞ்சு ப்ரைஸை எடுத்து வாடிக்கையாளருக்குக் கொடுத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த காலத்தில் பெரும்பாலானோர் படிப்பு அல்லது வேலை நிமித்தமாக வெளியூர்களிலேயே தங்க வேண்டி உள்ளது. இப்படி வெளியூர்களில் இருக்கும் பலருக்கும் உணவு தான் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.
இதில் தனியாக ரூம் எடுத்துத் தங்கும் சிலர் வீடுகளிலேயே சமைத்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால், தனித்து இருக்கும் பெரும்பாலானோர் உணவகங்களிலேயே சாப்பிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.

ஷாக் சம்பவம்: இவர்கள் அனைத்து வேளையும் வெளியே தான் உணவைச் சாப்பிடுகிறார்கள். வெளியே சாப்பிடும் போது என்ன தான் வகை வகையாகச் சாப்பிட்டாலும் வீடுகளைப் போலச் சுகாதாரமாக அனைத்து ஹோட்டல்களும் இருக்கும் எனச் சொல்ல முடியாது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படாத உணவைச் சாப்பிட்டால் நமக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படவே செய்யும். இதன் காரணமாக மருத்துவர்கள் முடிந்தவரை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடச் சொல்வார்கள். அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இங்கே நடந்துள்ளது.
இந்த காலத்தில் துரித உணவைச் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னை உள்ளிட்ட நகரப்புறங்களில் வசிப்போர் பெரும்பாலும் துரித உணவுகளையே விரும்பி சாப்பிடுகிறார்கள். இப்படி வெளியே சென்று நாம் சாப்பிடும் போது உணவகங்களில் குறைந்தபட்ச சுகாதாரம் இருக்கும் என்றே நாம் நம்புவோம். வாடிக்கையாளருக்கும் உணவகத்துக்கும் இடையே நம்பிக்கை வலுவாக இருந்தால் மட்டுமே இந்த பிஸ்னஸ் நன்றாக இருக்கும்.
குப்பையில் இருந்த உணவு: அதை உடைக்கும் வகையிலான சம்பவம் நடந்துள்ளது. பர்கர் கிங் உணவகத்தில் உதவி மேலாளரே குப்பையில் இருந்த பிரெஞ்ச் ப்ரைஸை எடுத்து வாடிக்கையாளர் ஒருவருக்குக் கொடுத்துள்ளார். அதாவது குப்பையில் இருந்த பிரெஞ்ச் ப்ரைஸை எடுத்த அந்த நபர் அதை புதிய பிரெஞ்ச் ப்ரைஸ் உடன் பிக்ஸ் செய்து வாடிக்கையாளருக்கு வழங்கியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஜூலை 9ஆம் தேதி நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்ல வேலையாக இந்தச் சம்பவம் நம்ம ஊரில் நடக்கவில்லை. இது அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள பர்கர் கிங்கில் நடந்துள்ளது. அங்கே முதலில் இரண்டு பெண்கள் வாக்குவாதம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்ற போது அந்த பெண்கள் ஆவேசமாகக் கத்திக் கொண்டு இருந்துள்ளனர். தங்களுக்குக் குப்பையில் இருந்த உணவை எடுத்துக் கொடுத்ததாக கத்திக் கொண்டிருந்தனர்.
என்ன நடந்தது: அப்போது அவர்களை அமைதியாக இருக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் தொடர்ந்து ஆவேசமாகக் கத்திக் கொண்டு இருக்க.. போலீசாரின் உத்தரவைப் பின்பற்றவில்லை என்று கூறி அவர்களைக் கைது செய்துள்ளனர். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து பர்கர் கிங் நிர்வாகத்திடம் இருந்து போலீசாருக்கு மெயில் சென்றுள்ளது.
அதாவது தங்கள் நிறுவனத்தின் மேனேஜர் தான் குப்பையில் இருந்த ப்ரைஸை எடுத்து வாடிக்கையாளருக்குக் கொடுத்ததாகவும் அதுவே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து கிறிஸ்டின் மேஜர் என்ற 39 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications