டெல்லி வன்முறை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் குழு விசாரிக்கிறது
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக (சி.ஏ.ஏ.) நடந்த போராட்டங்கள் டெல்லியில் வன்முறையாக வெடித்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை நடத்த உள்ளது.
வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டம் மிகப் பெரிய வன்முறையாக வெடித்தது. இதில் 53 பேர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

இம்மோதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர் அமைப்புகளின் தலைவர் உமர் காலித் உள்ளிட்ட பலர் ஊபா உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டனர். சீதாராம் யெச்சூரி போன்ற அரசியல் தலைவர்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இதனிடையே Constitutional Conduct Group (CCG) என்ற அமைப்பு டெல்லி வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகுர், டெல்லி, சென்னை உயர்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி ஏபி ஷா, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ். சோதி, பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ், முன்னாள் உள்துறை செயலாளர் ஜிகே பிள்ளை, முன்னாள் போலீஸ் உயர்அதிகாரி மீரான் சதா போர்வான்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இனி இந்த குழுவானது, 'Citizens Committee on the Delhi Riots of February 2020: Contexts, Events and Aftermath என்ற பெயரில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications