கொல்லப்பட்ட 19-ல் 7 பேர் இந்துக்கள்.. என்ன நடக்கிறது காஷ்மீரில்? ”அதுதான்” காரணம் - சர்வதேச அமைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காஷ்மீர் படுகொலைகள் பற்றி விரைவான, சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டெர்னேஷனல் வலியுறுத்தி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த வாரம் அம்மாநிலத்தில் சிறுபான்மையினர்களாக உள்ள பண்டிட்டுகள் 3 பேர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டெர்னேஷனல், ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகே வன்முறை சம்பவங்கள் பெருகி இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

 7 இந்துக்கள் படுகொலை

7 இந்துக்கள் படுகொலை

கடந்த ஆண்டு மட்டுமே 19 பேர் இதுபோல் கொலை செய்யப்பட்டதாகவும் அதில், 7 பேர் இந்துக்கள் என்று அந்த அமைப்பு கூறி இருக்கிறது. இதுகுறித்து அதன் இந்திய பிரிவின் தலைவர் ஆகர் பட்டேல் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "ஜம்மு காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு கருதி இந்திய அதிகாரிகள் அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

அரசு மற்றும் அரசு சார்பற்றவர்களால் இழைக்கப்பட்ட வெளிப்படையான மனித உரிமை மீறல்களாலும் துஷ்பிரயோகங்களாலும் ஜம்மு காஷ்மீர் மக்கள் பாதுகாப்பட்டு இருக்கின்றனர். ஜம்மு காஷ்மீர் மக்களின் மனித உரிமைகளை இந்திய அதிகாரிகள் திட்டமிட்டே புறக்கணித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை நாம் மதிப்பதுடன் அவற்றை உறுதி செய்யவும் வேண்டும்.

சிறப்பு அதிகாரம் ரத்து

சிறப்பு அதிகாரம் ரத்து

2019 ஆம் ஆண்டு சிறப்பு அதிகாரம் செய்யப்பட்ட பிறகு இந்திய அரசு ஏராளமான மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்களை யுஏபிஏவில் கைது செய்தது. உண்மையான செய்திகளை வெளியிட்ட காரணத்திற்காக 36 பத்திரிகையாளர்களை விசாரணைக்கு உட்படுத்தி தாக்கவும், மிரட்டவும் செய்தார்கள்.

 இணைய இணைப்பு துண்டிப்பு

இணைய இணைப்பு துண்டிப்பு

ஜம்மு காஷ்மீரில் மட்டும் கடந்த 2021 ஆண்டு 85 முறை இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. உலகிலேயே இதுதான் அதிகம். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இவ்வாறு இணையதள இணைப்புகளை துண்டித்தார்கள். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு மேம்பட்டு இருப்பதாக இந்திய அரசாங்கம் சொன்னாலும் அங்கு இன்று அயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நடைமுறையில் உள்ளது.

மனித உரிமை மீறல்கள்

மனித உரிமை மீறல்கள்

பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்பட்டு உள்ளன. பாலியல் வன்கொடுமைகள், துன்புறுத்தல்கள், சட்டத்துக்கு புறம்பான குற்றங்களில் ஈடுபட்டு இருக்கின்றனர். ஆனால், யாருமே இதுவரை தண்டிக்கப்படவே இல்லை. இந்த குற்றங்களை தடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் நீதியும் வழங்க தவறிவிட்டார்கள். இந்திய அரசாங்கம் இத்தகைய செயல்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மனித உரிமைகளை காக்க வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+