டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வலதுசாரி மாடல் vs இடதுசாரி மாடல்.. ரிஹானாவை வம்பிழுத்து கங்கனா ஆபாச ட்வீட்.. பெரும் சர்ச்சை

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவின் தீவிர ஆதரவாளரான பாலிவுட் நடிகை கங்கனா ரனாவாத் அண்மைக் காலமாக போடும் ட்வீட்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
வலது சாரி மாடல் vs இடதுசாரி மாடல்.. என ரிஹானாவை வம்பிழுத்து கங்கனா ரனாவத் போட்ட ஆபாச ட்விட்டுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மும்பையில் சிவசேனா கட்சியுடன் முட்டிக்கொண்டதில் இருந்து நடிகை கங்கனா ரனாவத் பாஜகவின் தீவிர ஆதரவாளராக மாறினார். அவர் விவசாயிகள் போராட்டத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடத்தி வரும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து வருவதால் சர்வதேச கவனத்தை விவசாயிகள் போராட்டம் பெற்று வருகிறது.

போராட்டத்தில் அந்நிய சதி

போராட்டத்தில் அந்நிய சதி

அதேநேரம் விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாக மத்திய அரசு உறுதியாக நம்புகிறது. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வராததால் இதில் ஏதேனும் வெளிநாட்டு சக்திகள் தலையிட்டிருககலாம் என நினைக்கிறது. குடியரசுத்தினத்தன்று நடந்த சம்பவத்தை அடுத்து மத்திய அரசு, டெல்லிக்கு வந்து விவசாயிகள் போராடுவதை தடுக்க ஆணி பாதை, முள்வேலி, பெரும் தடுப்புகளை உருவாக்கி வருகிறது, அத்துடன் இணைய சேவையும் தற்காலிகமாக சில இடங்களில் முடக்கப்பட்டது.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தும் வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளின் போராட்டத்தை பற்றிய ஒரு செய்தியின் லிங்க்கை பகிர்ந்து 'ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?' என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பதிவு பெரும் வைரலானது. இதுவரை இந்த ட்வீட் 2 லட்சத்த்துக்கும் அதிகமான மக்களால் ரீட்வீட் செய்திருந்தனர். உலக அளவில் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்தது.

விவசாயிகள் அல்ல

விவசாயிகள் அல்ல

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கங்கனா ரனாவத், ரிஹானாவின் ட்வீட்டை பகிர்ந்து கடுமையாக சாடினார், அந்த பதிவில், யாரும் அதைப் பற்றி பேசப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் விவசாயிகளே அல்ல. இந்தியாவைப் பிரிக்க நினைக்கும் தீவிரவாதிகள். அதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் நாட்டை சீனா ஆக்கிரமித்து, அமெரிக்காவைப் போல ஒரு சீன காலனித்துவ நாடாக மாற்ற முயற்சிக்கிறது. அமைதியாக உட்கார், முட்டாளே. உங்களைப் போல நாங்கள் நாட்டை விற்பவர்கள் அல்ல" என்று கூறியிருந்தார்.

வலதுசாரி மாடல்

இதனிடையே இன்னொரு ட்வீட்டில், தான் .வலது சாரி மாடல் என்றும் ரிஹானா இடதுசாரி மாடல் என்றும் கூறி, ரிஹானாவின் ஆபாசமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க ட்வீட் என்று பலரும் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

English summary
bjp suppporter Kangana Ranaut stirred up controversy on Twitter when she took on international Pop-superstar Rihanna for her tweet in support of the ongoing farmers' protests in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X