"ஐபோன் எல்லாம் வாங்க கூடாது!" சொல்வது வலதுசாரிகள்.. சீனாவுக்கு கூட இப்படிதான் பதிலடி கொடுத்தார்களாம்
டெல்லி: ஆப்பிள் நிறுவனம் இப்போது தனது விநியோக சங்கிலியை மாற்றி அமெரிக்காவில் தனது உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக டிரம்பிற்கு ஆப்பிள் நிறுவனம் பரிசு ஒன்றையும் அளித்திருக்கிறது. மறுபுறம் இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், நெட்டிசன்கள் இது தொடர்பாக பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் வெளிநாடுகலில் இருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்க வேண்டும் என்றும் டிரம்ப் தொடருந்து வலியுறுத்தி வருகிறார். இதற்கிடையே ஆப்பிள் சிஇஓ டிம் குக் தனது நிறுவனம் அமெரிக்காவில் உற்பத்தியைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம்
இதற்காக அமெரிக்காவில் 100 பில்லியன் டாலரை முதலீடு செய்யப் போவதாகவும் டிமர்ப் கூறியுள்ளார். இந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்பு அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு ஒரு கிப்ட் வழங்கினார். டிரம்பிற்கு டிம் குக் வழங்கியது ஒன்றும் சாதாரண கிப்ட் இல்லை இல்லை. அது ட்ரம்பிற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, 24 காரட் தங்க பேஸை கொண்டதாகும்.
ஆப்பிளில் பணிபுரியும் முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரால் இது உருவாக்கப்பட்டதாக டிம் குக் தெரிவித்தார். கீழே தங்க பேஸ்ஸை கொண்ட அது மேலே கண்ணாடியைக் கொண்டிருக்கிறது. அந்த கிளாஸில் ஆப்பிள் லோகோ செதுக்கப்பட்டு, மேலே டொனால்ட் ட்ரம்பின் பெயரும், கீழே டிம் குக்கின் கையெழுத்தும் இருக்கிறது. மேலும், அதில் மேட் இன் யுஎஸ்ஏ 2025 என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளன.
டிம் குக்
இந்த பரிசு தொடர்பாக டிம் குக் மேலும் கூறுகையில், "இது கலிபோர்னியாவில் தயாரிக்கப்பட்டது, இந்த கண்ணாடி நேரடியாக எங்கள் உற்பத்தியை மையத்தில் இருந்து வந்தது. இது அதிபர் ட்ரம்பிற்காக ரெடி செய்த கிப்ட்.. இது தனித்துவமான ஒன்றாகும். இதை ஒரு முன்னாள் அமெரிக்கக் கடற்படை வீரர் வடிவமைத்தார்.. அவர் இப்போது ஆப்பிளில் பணிபுரிகிறார். இதன் அடித்தளம் அமெரிக்காவின் உட்டா பகுதியில் இருந்து வந்தது, அது 24 காரட் தங்கம்" என்றும் அவர் கூறினார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக ஆப்பிள் நிறுவனம் கூறியிருந்த நிலையில், இந்த பரிசை ஆப்பிள் நிறுவனம் கொடுத்துள்ளது. இந்த பரிசை கொடுத்த பிறகு அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் திட்டங்களை டிம் குக் விவரித்தார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் புதிதாக அறிவிக்கப்பட்ட 100 பில்லியன் உட்பட மொத்தம் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
திட்டத்தை மாற்றும் ஆப்பிள்
மேலும், ஆப்பிளின் விநியோக சங்கிலியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களையும் டிம் குக் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில், "இந்த ஆண்டு மட்டும், அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்திற்காக 19 பில்லியன் சிப்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்படும் அரிய பூமி கனிமங்கள் (Rare earth metals) ஐ எம்.பி. மெட்டீரியல்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கவுள்ளோம்" என்றும் டிரம்ப் கூறினார்.
இப்போது ஐபோன்களின் உற்பத்தி பெரியளவில் சீனா மற்றும் இந்தியாவில் இருந்தே வருகிறது. அதிலும் குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் டிரம்பின் அழுத்தத்தால் ஆப்பிள் தனது திட்டத்தை மாற்றுகிறது. அமெரிக்காவில் இருந்து தனது சிப்களை வாங்கும் வகையில் விநியோக சங்கிலியை மாற்றுகிறது.
நெட்டிசன்கள்
மறுபுறம் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதித்துள்ள நிலையில், இந்தியாவில் நெட்டிசன்கள் இது தொடர்பாக பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக ஐபோன் வாங்குவதையே தவிர்க்க வேண்டும் எனக் கூட சில வலதுசாரி ஆதரவாளர்கள் சொல்வார்கள் என சில நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தியா சீனா இடையே மோதல் ஏற்பட்ட போது அப்படி தான் சீன பொருட்களை வாங்கக்கூடாது என வலதுசாரி ஆதரவாளர்கள் சொன்னார்கள். இப்போது அமெரிக்காவுடன் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதைச் சொல்வார்கள் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications