எலான் மஸ்க்கிற்கு எதிராக கை கோர்த்த அம்பானி - ஏர்டெல்.. ஷாக் கொடுத்த மத்திய அரசு.. என்ன நடந்தது?
டெல்லி: சேட்டிலைட் இன்டர்நெட் சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் இடையே இருவேறு கருத்துக்கள் நிலவி வந்தன. இந்த விவகாரத்தில், மத்திய அரசு அதிரடியான முடிவை எடுத்தது. மத்திய அரசின் முடிவு குறித்தும் எலான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் - ஜியோவிற்கும் இடையே நிலவிய போட்டி குறித்தும் இங்கே பார்க்கலாம்.
தொலைத்தொடர்பு துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில் ஃபைபர் ஆப்டிகல் உள்ளிட்டவை வழியாக இண்டெர்நெட் சேவை வழங்கப்படுகிறது. இந்த இணைய சேவையை ஜியோ, பார்தி ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

தற்போது சேட்டிலைட் வழியாக பல்வேறு நாடுகளிலும் இணைய சேவை வழங்கப்படுகிறது. எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனம் இந்த சேவையை பெருமளவு செய்து வருகிறது. செயற்கை கோள் வழியாக இணைய சேவை வழங்கப்படும் போது, கிராமம், நகரம் என பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான அதிவேக இணைய சேவை அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
செயற்கை கோள் வழியாக இணைய சேவை வழங்குவதில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனம் முன்னணியில் உள்ளது. எலான் மஸ்க் நிறுவனம் இந்தியாவிலும் கால் பதிக்க முயற்சித்து வருகிறது. அதேவேளையில், செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்கும் முயற்சியில் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்தியாவில் தொலை தொடர்பு சேவை வழங்குவதற்கான ஸ்பெக்டரம் ஒதுக்கீடு அலைக்கற்றையை பெறுவதற்கு ஏல நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. யார் அதிக தொகை கேட்கிறார்களோ அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால், சேட்டிலைட் இணைய சேவை அலைக்கற்றை ஒதுக்கீட்டை பொறுத்தவரை ஏல ஒதுக்கீடு கூடாது எனவும் நிர்வாக ரீதியில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எலான் மஸ்க் வலியுறுத்தி இருந்தார்.
பிற நாடுகள் ஏல முறையை பின்பற்றவில்லை எனவும் இந்தியாவும் அதையே பின்பற்ற வேண்டும் என்பது எலான் மஸ்க் உள்ளிட்ட சர்வதேச டெலிகாம் நிறுவனங்கள் கூறுகின்றன. ஏல நடைமுறையை பின்பற்றக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதாவது, ஏல நடைமுறை போல் இன்றி அனைத்து நிறுவனங்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பது எலான் மஸ்க் உள்ளிட்ட நிறுவனங்களின் கோரிக்கையாக இருந்தது.
ஆனால், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை ஏல முறையை பின்பற்ற வேண்டும் என்றே வலியுறுத்தின. இந்த நிலையில், சேட்டிலைட் அலைக்கற்றை ஒதுக்கீடு என்பது சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறையான நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் ஒதுக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: -
சேட்டிலைட் ஸ்பெக்ட்ரம் என்பதால், இந்த ஒரு விலையும் இன்றி ஸ்பெக்டரம் ஒதுக்கப்படும் என்று அர்த்தம் கிடையாது. இதற்கான கட்டணம் என்ன என்பதை நீங்களோ நானோ முடிவு செய்ய முடியாது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) முடிவு செய்யும். இதற்காக ஆவணம் ஏற்கனவே டிராய்- சுற்றிறிக்கையாக அனுப்பியுள்ளது. மிகச்சிறந்த கட்டணத்தை டிராய் நிர்ணயிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிர்வாக ஒதுக்கீடு என்பதுதான் அனைவருக்குமான சம வாய்ப்பாக இருக்கும் என்பது எலான் மஸ்க் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் கருத்தாக உள்ளது. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் மட்டும் இன்றி அமேசான் நிறுவனத்தின் குயிபர் (Kuiper) ம் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உள்ளது. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனம் தற்போது 71 நாடுகளில் சேட்டிலைட் வழியாக அதிவேக இணைய சேவையை அளித்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications