இந்தியாவுக்கு விழும் அடி.. ஈரான் குழப்பத்தால் வந்த புதிய பிரச்சனை.. பின்னணியில் பாஸ்மதி அரிசி
டெல்லி: ஈரான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஈரானில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஈரானால் நம் நாட்டுக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
ஈரான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. பொதுமக்கள் கடந்த மாதம் 28 ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது.

இதனால் அந்த நாட்டின் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வரை 65 போராட்டக்காரர்கள் பலியாகி உள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இண்டர்நெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த நாட்டின் அந்திய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி ஈரானின் நாணய மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்த ஆண்டு ஈரான் - இஸ்ரேல் மோதலின்போது அமெரிக்கா டாலருக்கு நிகரான ஈரானின் உள்ளூர் நாணயமான ஒரு ரியாலின் மதிப்பு 90 ஆயிரமாக இருந்தது. தற்போது அது 1.50 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால் ஈரானின் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது.
ஈரானை எடுத்து கொண்டால் நம் நாட்டுடன் நல்ல உறவில் உள்ளது. இருநாடுகள் இடையே வர்த்தக உறவும் சிறப்பாகவே இருக்கிறது.
ஒருகாலத்தில் நாம் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தோம். ஆனால் ஈரான் மீதான அமெரிக்காவின் தடையால் கச்சா எண்ணெய் இறக்குமதி கைவிடப்பட்டது. இதற்கு அமெரிக்காவின் பொருளாதார தடைகள் தான் முக்கிய காரணம். இருப்பினும் ஈரான் தொடர்ந்து நம்மிடம் இருந்து அதிகப்படியான பொருட்களை நம் நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்கிறது.
நம் நாட்டில் இருந்து டீ, பாஸ்மதி அரிசி, மருந்து பொருட்கள் ஈரான் செல்கின்றன. குறிப்பாக பஞ்சாப், சண்டிகரில் இருந்து உயர்தர பாஸ்மதி அரிசி ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அமெரிக்காவின் தடை, ஈரானின் உள்நாட்டு நாணயமான ரியாலின் மதிப்பு வீழ்ச்சி, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றால் ஈரான் அரசு உணவு இறக்குமதிக்கான மானியங்களை நிறுத்தி உள்ளது.
இதனால் நம் நாட்டில் இருந்ந்து ஈரானுக்கான ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரானுக்கு செல்ல வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அரிசி துறைமுகங்களில் தேங்கி உள்ளது. இதனால் ஈரானுக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்க தொடங்கி உள்ளன.
ஈரானை எடுத்து கொண்டால் நம் நாட்டின் அரிசிக்கு பெரிய மார்க்கெட்டாக உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் டன் அரிசி ஈரானுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.12,000 கோடியாகும். இதில் ஏறக்குறைய 40 சதவீத தொகை பாஸ்மதி அரிசி ஏற்றுமதியால் கிடைக்கிறது. தற்போது அதில் சரிவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
இதுபற்றி பஞ்சாப் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் துணை தலைவரும், ஏற்றுமதியாளருமான ரஞ்சித் சிங் ஜோசன் கூறுகையில், ‛‛அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு கடுமையாக சரிந்து, இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்தபட்ச நிலையை எட்டியுள்ளது.
இதனால் ஈரான் பல ஆண்டுகளாக வழங்கி வந்த உணவு பொருட்கள் மீதான இறக்குமதி மானியங்களை நிறுத்தி உள்ளது. இதனால் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்கள் தயக்கத்தில் உள்ளனர். ஈரானில் குழப்பம் தொடரும்பட்சத்தில் நம் நாட்டில் இருந்து அங்கு செல்லும் டீ, பாஸ்மதி அரிசி மற்றும் மருந்துகள் போன்றவற்றின் ஏற்றுமதியும் சரிய வாய்ப்புள்ளது'' என்றார்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு!












Click it and Unblock the Notifications