"அங்கிள் சேன்ஞ் தாங்க.." ரூ.50-க்கு பெட்ரோல் போட்டு.. ரூ.2000 நோட்டுகளை நீட்டி இளைஞர்கள் சேட்டை
டெல்லி: ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்ததுத்தான் தாமதம். இப்போது எல்லா இடங்களும் 2000 ரூபாய் நோட்டுகளால் நிரம்பி வழிகிறது.
2016இல் இந்தியாவில் பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அந்த சமயத்தில் தான் நாட்டில் புதிதாக 2000, 500, 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.
புழக்கத்தில் இருந்த 85% நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், அப்போது ரொக்கத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. அப்போது ரொக்கம் குறித்த தட்டுப்பாட்டைச் சமாளிக்க 2000 ரூபாய் நோட்டுகள் பெரியளவில் உதவின..

2000 ரூபாய் நோட்டுகள்: அதேநேரம் 2000 ரூபாய் நோட்டுகளுக்குச் சில்லறை கிடைப்பதில்லை என்ற புகாரும் இருந்து கொண்டே தான் இருந்தது. மேலும், ரிசர்வ் வங்கியும் கொஞ்சக் காலத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதையும் நிறுத்திவிட்டது. இதனால் விரைவில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று பலரும் கூறினர். இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போதும், மத்தி அரசு அப்படியொரு திட்டம் இல்லை என்றே கூறியது.
இந்தச் சூழலில் தான் சமீபத்தில் ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை அறிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமான நோட்டாக தொடரும் என்றும் அதை வரும் செப். மாதத்திற்குப் பொதுமக்கள் அருகே இருக்கும் வங்கிகளில் சென்று இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை முதல் செப். இறுதி வரை நாம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
பெட்ரோல் பங்குகள்: இந்த அறிவிப்பு சமூகத்தில் பல விதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெட்ரோல் நிலையங்கள் இதனால் பெரிய சிக்கலை எதிர் கொண்டுள்ளனர். அதாவது வாடிக்கையாளர்கள் வெறும் 100, 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு, 2,000 ரூபாய் நோட்டுகளை நீட்டுவதாக பெட்ரோல் பங்கு ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் கூறுகையில், "டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிராவில் உள்ள 6 டீலர்களிடம் ரொக்கத்தின் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. உபி-இல் குறைந்தது 1,000 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பினால் மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்குவோம் என்று அறிவித்துள்ளனர்,
டெல்லி: தலைநகர் டெல்லியிலும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு இதே பிரச்சினை தான். அங்கு எந்தவொரு கட்டுப்பாடும் விதிக்க முடியாது என்கிறார்கள் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள். இதனால் குறைந்த அளவு பெட்ரோல் போடுவோர் யுபிஐ அல்லது பேடிஎம் மூலம் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறார்கள். முன்பு, ரூ.2,000 நோட்டுகள் என்பது எங்கள் தினசரி விற்பனையில் 1-2% ஆக மட்டுமே இருக்கும்.

ஆனால், இப்போது அது 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாங்கள் ஒன்றும் வங்கிகள் இல்லை. ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் பணத்தையே மற்ற வாடிக்கையாளருக்குச் சில்லறையாகத் தருகிறோம். 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றக் கால அவகாசம் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வது இல்லை. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.
அதேபோல பொதுமக்களும் 2000 ரூபாய்க்கு பெட்ரோல் அடித்தால் மட்டுமே பங்குகள் ரொக்கத்தை வாங்கிக் கொள்வதாகப் புகார் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இப்போது 2000 ரூபாய் நோட்டுகளால் நிரம்பியுள்ளனர். பிரபல உணவு டெலிவரி செயலியான ஜொமேட்டாவிலும் 2000 ரூபாய் நோட்டுகள் பண்பாடு அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல், டெலிவரி ஆர்டர்களில் 72% ரூபாய் 2000 நோட்டுகளில் செலுத்தப்படுவதாக ஜொமேட்டா தெரிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications