"2000 ரூபாய்" மாத்தியாச்சா.. ரூ.2000 நோட்டு மாற்றுவதில் மத்திய அரசு புது அறிவிப்பு.. டைம் நெருங்குது
டெல்லி: 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிவிட்டீர்களா? இதுகுறித்து மத்திய அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.. என்ன அது?
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக, மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.. இதையடுத்து, இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணிகளும் வேகம் எடுத்தன..

அந்தவகையில், செப்டம்பர் 30-ந் தேதி வரை இதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.,. ஆரம்பத்தில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி குறைவாகவே இருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் அதிக அளவில் டெபாசிட்கள் நடந்தன.
குறிப்பாக, 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனைகள் வங்கிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை காண முடிந்தது என்று மீடியாக்களில் செய்திகளும் வெளியாகியிருந்தன.
அறிவிப்பு: வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக அளவில் பங்களிப்பு இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும், ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வருகின்றனர். இதனிடையே, இந்திய எஸ்பிஐ வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பது குறித்து ஒரு பிரத்யேக அறிக்கையே வெளியிட்டது.
பெட்ரோல் பங்க்: அந்த அறிக்கையில், "2000 ரூபாய் நோட்டு திரும்ப பெற்றதில் இந்தியாவில் நுகர்வு பிரிவில், கிட்டத்தட்ட 55000 கோடி ரூபாய் அளவிலான தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பிற்கு பிறகு, தங்கம், ஏசி, மொபைல், போன், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் பணத்தை செலவு செய்துள்ளனர்.. பெட்ரோல் பங்களில் மக்கள் அதிகப்படியான 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் செலவு செய்கிறார்கள்.
ஈகாமர்ஸ், டிஜிட்டல் சேவைகளில் பெரும்பாலான கேஷ் ஆன் டெலிவரிகளுக்கு 2000 ரூபாய் நோட்டு கொடுக்கப்பட்டுள்ளது.. 2000 ரூபாய் நோட்டு மூலம் பெறப்பட்ட 92000 கோடி ரூபாய் அளவிலான வங்கி டெபாசிட் தொகையில், சுமார் 55000 கோடி ரூபாயை மக்கள் திரும்பபெற்றுள்ளனர்" என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்திருந்தது.
லிஸ்ட் போட்ட எஸ்பிஐ: அதுமட்டுமல்ல, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதால் வங்கிகளில் டெபாசிட்டுகள் அதிகரிக்கும்.. கடன்கள் திருப்பி செலுத்தப்படுவது அதிகரிக்கும்.. நுகர்வு அதிகரிக்கும், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய்க்கு வேகம் கிடைக்கும், ஜிடிபி உயருவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.. ரூ.2000 நோட்டுகள் உயர் மதிப்புடையது என்பதால், டிஜிட்டல் ரூபாய்க்கு மாறுவது எளிதாகும் என்றெல்லாம் எஸ்பிஐ அந்த அறிக்கையில் லிஸ்ட் போட்டு கூறியிருந்தது.
எனினும், ரூ.2000 நோட்டு திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவிற்கு எதிரான டெல்லி கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கிக்கு அதிகாரமில்லை என்ற பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில், அந்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் வழங்கப்படுமா? என்பது குறித்து மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை போல, உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டமும் அரசிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்கள்.
விளக்கம்: இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதிலளித்தார்.. அப்போது, இப்போதைய சூழலில்,2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த பரிசீலனை எதுவுமே அரசிடம் இல்லை. அதேபோல, 2000 ரூபாய் நோட்டுகளை போல, உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டமும் அரசிடம் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
இந்த திடீர் விளக்கத்திற்கு காரணம், "ஒருவேளை தேவைப்படும்பட்சத்தில், கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது" என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் ஒருமுறை சூசகமாக தெரிவித்திருந்தார்.. அதனால்தான், நேற்றைய தினம் மக்களவையில் இதுகுறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது.. இதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
டிபாசிட்: கடந்த மாதம் 30ம் தேதி வரை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, சுமார் 2.72 லட்சம் கோடி ரூபாய் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. மேலும், திரும்ப பெறப்பட்ட மொத்த 2,000 ரூபாய் நோட்டுகளில், 87 சதவீதம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது, மீதமுள்ள 13 சதவீதம், வேறு மதிப்புள்ள நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications