"2000 ரூபாய்" மாத்திட்டீங்களா.. ரூ.2000 நோட்டை திரும்பபெற போவதில்லையா ரிசர்வ் வங்கி? வெளியான தீர்ப்பு
டெல்லி: ரூ.2000 நோட்டு திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது... புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கிக்கு அதிகாரமில்லை என்ற பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.. இதையடுத்து, இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணியும் துரிதமாக ஆரம்பமானது..
செப்டம்பர் 30-ந் தேதி வரை இதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.,. ஆரம்பத்தில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி குறைவாகவே இருந்தது..

ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அதிக அளவில் டெபாசிட் செய்யப்படுவதாக கூறப்பட்டன.. முக்கியமாக, 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனைகள் வங்கிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை காண முடிந்தது என்று செய்திகள் வெளியாகின..
வங்கிகள்: வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக அளவில் பங்களிப்பு இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும், ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்திய எஸ்பிஐ வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பது குறித்து ஒரு பிரத்யேக அறிக்கையே வெளியிட்டுள்ளது.
எஸ்பிஐ லிஸ்ட்: அந்த அறிக்கையில், "2000 ரூபாய் நோட்டு திரும்ப பெற்றதில் இந்தியாவில் நுகர்வு பிரிவில், கிட்டத்தட்ட 55000 கோடி ரூபாய் அளவிலான தொகை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பிற்கு பிறகு, தங்கம், ஏசி, மொபைல், போன், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் பணத்தை செலவு செய்து உள்ளதாகவும், பெட்ரோல் பங்களில் மக்கள் அதிகப்படியான 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் செலவு செய்வதாகவும் சுட்டிகாட்டி உள்ளது.
அறிக்கை: இந்த தகவலை All-India Petroleum Dealers Association (AIPDA) என்ற அமைப்பு தெரிவித்துள்ளதாம்.. அத்துடன், ஈகாமர்ஸ், டிஜிட்டல் சேவைகளில் பெரும்பாலான கேஷ் ஆன் டெலிவரிகளுக்கு 2000 ரூபாய் நோட்டு கொடுக்கப்பட்டிருப்பதாகவும், 2000 ரூபாய் நோட்டு மூலம் பெறப்பட்ட 92000 கோடி ரூபாய் அளவிலான வங்கி டெபாசிட் தொகையில், சுமார் 55000 கோடி ரூபாயை மக்கள் திரும்பபெற்று இருப்பதாகவும், அந்த அறிக்கையில் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்ல, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதால் வங்கிகளில் டெபாசிட்டுகள் அதிகரிக்கும்.. கடன்கள் திருப்பி செலுத்தப்படுவது அதிகரிக்கும்.. நுகர்வு அதிகரிக்கும், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய்க்கு வேகம் கிடைக்கும், ஜிடிபி உயருவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.. ரூ.2000 நோட்டுகள் உயர் மதிப்புடையது என்பதால், டிஜிட்டல் ரூபாய்க்கு மாறுவது எளிதாகும் என்றும் அந்த எஸ்பிஐ அறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கு: எனினும், 2000 ரூபாய் நோட்டு விவகாரத்தில், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்..
புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை என்றும், இது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு எடுக்க முடியும் என்றும் அவர் தன்னுடைய மனுவில் விளக்கமாக சொல்லியிருந்தார்.
இன்று தீர்ப்பு: இந்த வழக்கை தலைமை நீதிபதி சதிஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு விசாரித்தது. அப்போது இந்த மனுவுக்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, இது பொருளாதார கொள்கை சார்ந்த விஷயம் என்று தெரிவித்திருந்தது.. மேலும், இந்த வழக்கு விசாரணை கடந்த மே 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு இன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுட்டு வந்தது.
அதன்படியே, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரூ.2000 நோட்டு திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது... புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கிக்கு அதிகாரமில்லை என்ற பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளதால், 2000 ரூபாயை மாற்றும் பணி வேகம் எடுத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications