பி.எம்-கேர்ஸ் நிதியில் இருந்து கொரோனா தடுப்புக்காக ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.. மத்திய அரசு
டெல்லி: கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளுக்கான நிவாரண நிதியான பி.எம்-கேர்ஸ் நிதியில் இருந்து ரூ .3,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
Recommended Video
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 3,100 கோடியில் ரூ. 2,000 கோடி வென்ட்டிலேட்டர் வாங்குவதற்கும், ரூ. 1,000 கோடி வெளி மாநில தொழிலாளர்களின் நலனுக்காகவும், ரூ. 100 கோடி தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் முற்றிலும் இந்தியாவிலேயே சுமார் 50000 வெண்டிலேட்டர்களை தயாரித்து, அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசாங்கத்தால் நடத்தப்படும் கொரோனா வைரஸ் தடுப்பும மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ .1,000 கோடி மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, உணவு, தங்குமிடம், மருத்துவ சிகிச்சை மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர்கள் அல்லது நகராட்சி ஆணையர்களின் வசம் ஒப்படைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் 27-ம்தேதி PM - CARED நிதி மத்திய அமைச்சரவையால் உருவாக்கப்பட்டது. அறக்கட்டளை போன்று செயல்படும் இந்த அமைப்பிற்கு பிரதமர் மோடி தலைவராக இருப்பார். உறுப்பினர்களாக மத்திய அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அமைப்புக்கு தனி நபர், கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழில்துறை குழுமங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசு துறைகள் நிதி அளிக்கின்றன. பிஎம் கேருக்கு அளிக்கப்படும் இந்த தொகைக்கு வரி கிடையாது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாள் முதல், பி.எம். கேர்சுக்கு நிதி வழங்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை வைத்து வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் முதல்முறையாக பிஎம் கேர்ஸ் நிதி குறித்து வெளிப்படையாக பிரதமர் அலுவலகம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications