ஐடி ரெய்டில் சிக்கிய 350 கோடி.. அது யாரோட பணம் தெரியுமா? 10 நாளுக்கு பிறகு மவுனம் கலைத்த காங். எம்பி
டெல்லி: காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாகுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற ஐடி ரெய்டில் சுமார் 350 கோடி ரூபாய் பணம் ரொக்கமாக சிக்கியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட பணம் குறித்து காங்கிரஸ் எம்.பி விளக்கம் அளித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தீரஜ் சாகு. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2018 ம் ஆண்டு அவர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். ஜார்க்கண்ட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 64 - வயதாகும் தீரஜ் சாகு தொழில் அதிபரும் ஆவார். இவருக்கு சொந்தமாக மதுபான நிறுவனங்கள் உள்ளன. ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அவர் தொழில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தீரஜ் சாகுவின் மதுபான நிறுவனங்கள் சார்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி தீரஜ் சாகு தொடர்புடைய இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது லாக்கர் மற்றும் மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.
ரூபாய் 354 கோடி: இதையடுத்து கூடுதலாக அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இயந்திரங்கள் மூலம் எண்ணும் பணி தொடங்கியது. சில நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனையில், ரூ.354 கோடி வரை கணக்கில் காட்டாத பணம் சிக்கியது. காங்கிரஸ் எம்பி தீரஜ் சாகுவுக்கு சொந்தமான இடத்தில் சிக்கிய இந்த பணத்தை பார்த்து மொத்த நாடும் அதிர்ந்து போனது.
மேலும் இந்திய வரலாற்றில் ஒரு ரெய்டில் கிடைத்த அதிகபட்ச பணமாக இதுதான் என்று சொல்லப்படுகிறது. ஐடி ரெய்டு என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு அரசியலுக்காக பயன்படுத்துகிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் சூழலில் இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்து காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
தீரஜ் சாகு விளக்கம்: ரெய்டு நடைபெற்று 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாகு, இவ்விவகாரம் குறித்து மவுனம் கலைத்துள்ளார். தீரஜ் சாகு கூறியதாவது:- தொழில்களை எனது குடும்பம் தான் நடத்தி வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் நேரடியாக எனக்கு தொடர்புடையது இல்லை. ரெய்டு நடத்தப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தமானது. இந்த பணத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
35 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் என் மீது சுமத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். எனக்கு மிகவும் வேதனையை தருகிறது. 100 ஆண்டுகளாக மதுபான தொழில் ஈடுபட்டு வருகிறோம். நான் அரசியலில் இருப்பதால் தொழிலில் அதிகம் கவனம் செலுத்துவது இல்லை. எனது குடும்பத்தினர்தான் முழுவதுமாக கவனித்து வருகிறார்கள். நான் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்வேன்.
மதுபானம் விற்றதன் மூலம்: எனது குடும்பம் பெரிய கூட்டு குடும்பம். என்னையும் சேர்த்து நாங்கள் மொத்தம் 6 சகோதரர்கள். அனைவருமே தொழில் நடத்தி வருகிறோம். அவர்களின் பிள்ளைகளும் நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளை பார்த்து வருகிறார்கள். கைப்பற்றப்பட்ட பணம் மதுபான தொழிலில் ஈடுபடும் எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானது. மதுபானம் விற்றதன் மூலம் கிடைத்த பணம் இதுதான். ரொக்கத்தில் தான் மதுபானம் விற்கப்படுவதால் ரொக்க பணமாக இருந்தது" என்றார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications