எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.69 ஆயிரம் கோடி லாபம்.. பெட்ரோல் டீசல் விலையில் நடந்த திடீர் ட்விஸ்ட்
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 3 காலாண்டுகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.69 ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனையில் கிடைத்த லாபமும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறுவது இறங்குவதற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை சென்னையில் ஒரு லிட்டர் ரூ.102.66 ஆக உள்ளது. டீசல் விலை சென்னையில் இன்று ஒரு லிட்டர் ரூ. 94.26 ஆக இருக்கிறது.

முன்பு தினசரி பெட்ரோல் டீசல் விலை மாறி வந்த நிலையில், இப்போது மாறாமல் இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப மாற்றாமல் இருக்க சர்வதேச சந்தையில் பெரிய அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அதற்கு ஏற்ப விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் விலையை குறைக்காமல் லாபம் ஈட்டின. பல நாட்கள் நஷ்டத்தை சந்தித்ததால் லாபம் வேண்டும் என்று கூறி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க மறுத்துவிட்டன. அதேநேரம் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றவே இல்லை.
முன்னதாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளுக்கு முன்பு குழப்பமான நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம், 14 ஆண்டுகளில் இல்லாத அளவாக பீப்பாய்க்கு 140 டாலராக உயர்ந்தது. எனினும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கும் நடைமுறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தாங்களாக முன்வந்து கைவிட்டன. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி, இவ்வழக்கம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சுமார் 2 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நீடிக்கிறது.
அதேநேரம் 2023-24 நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை, ஏறக்குறைய பாதியாக குறைந்திருக்கிறது. பீப்பாய்க்கு 72 டாலர் என்கிற அளவில் சரிந்தது.. அந்த நேரத்தில், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் ஆனால், முந்தைய நஷ்டத்தை இன்னும் ஈடுகட்டவில்லை என்று கூறிய எண்ணெய் நிறுவனங்கள், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்தன. அதேநேரம் எண்ணெய் நிறுவனங்கள் 3 காலாண்டுகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.69 ஆயிரம் கோடி லாபம் ஈட்டின
அதேநேரம் கடந்த மாதம் இரண்டாவது பாதியில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் லாபம் குறைந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.3 வீதம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், பெட்ரோல் விற்பனையில், முன்பு லிட்டருக்கு ரூ.13 முதல் ரூ.14 வரை லாபம் கிடைத்து வந்த நிலையில், அந்த லாபம் தற்போது ரூ.3 முதல் ரூ.4 ஆக குறைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா என்பது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பது குறித்து மத்திய அரசு எப்போதும் உத்தரவிடுவது இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன. சந்தையில் ஏற்ற, இறக்கம் நிலவுவதாக அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான கடைசி காலாண்டிலும் இதே நிலை நீடித்தால், விலை மாற்றி அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது" என்றார்.
-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்வு.. டீசல் ரூ.3 வரை அதிகரிப்பு.. இடியை இறக்கிய நயாரா நிறுவனம் -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications