பிரமாண்டத்தின் உச்சம்! ரூ.971 கோடி புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கு பாருங்க..‛வாவ்’ போட்டோக்கள்
டெல்லி: ரூ.971 கோடியில் கடந்த 2020ம் ஆண்டில் ‛சென்ட்ரல் விஸ்டா' என்ற திட்டத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். முக்கோண வடிவில் கட்டப்பட்டு வரும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பிரமாண்டத்தை வெளிப்படுத்தும் வகையிலான புதிய படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி ‛வாவ்' சொல்ல வைத்துள்ளன.
கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில் பாஜக மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். 5 ஆண்டு ஆட்சியை பிரதமர் மோடி வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில் மீண்டும் 2019 ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.
இதிலும் முந்தைய தேர்தலைவிட அதிக இடங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது. இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமரானார். இந்நிலையில் தான் இந்தியாவிற்கு புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட திட்டம் வகுக்கப்பட்டது.

புதிய நாடாளுமன்ற கட்டடம்
‛சென்ட்ரல் விஸ்டா புராஜெக்ட்'' என்ற பெயரில் மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான திட்டத்தை வகுத்தது. பிரதமர் நரேந்திர மோடி 2020ம் ஆண்டு இறுதியில் அடிக்கல் நாட்டி புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணியை அடிக்கல் தொடங்கி வைத்தார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குஜராத்தைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஹெச்சிபி நிறுவனம் வடிவமைத்த நிலையில் பணியை டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த பணி மிகவும் விரைவாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சகம் மேற்பார்வையிட்டு வருகிறது.

ரூ.971 கோடியில்...
மொத்தம் ரூ.971 கோடி செலவில் இந்த கட்டடம் அமைய உள்ளதாக மதிப்பிடப்பட்டு இருந்த நிலையில் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைய உள்ள இந்த பிரமாண்ட நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவைகளுடன் எம்பிக்களுக்கான ஓய்வு அறை, பெரிய நூலகம், நாடாளுமன்ற குழுவினருக்கான அறைகள், உணவருந்தும் பகுதிகள், வாகன நிறுத்துமிடம் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் உலகத்தரத்தில் சொகுசு வசதிகளோடு இந்த நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அனைத்து அறைகளிலும் டிஜிட்டல் மயமாகி உள்ளது.

ரூ.64,500 சதுர மீட்டர் பரப்பளவு
இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் மொத்தம் 4 தளங்களை கொண்டதாகும். புதிய நாடாளுமன்றத்தின் மொத்த பரப்பளவு 64,500 சதுர மீட்டராகும். புதிய நாடாளுமன்ற கட்டடம் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தைவிட 17,000 சதுர மீட்டர் அளவுக்கு பெரியதாகும். நாடாளுமன்ற மக்களவையில் 888 இருக்கைகளும், மாநிலங்களவையில் (ராஜ்யசபாவில்) 324 இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளது. தற்போது மக்களவையில் 543 பேரும், மாநிலங்களவையில் 245 பேரும்தான் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில் வரும் நாட்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதால் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு திறப்பு?
2022ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் குறித்த காலத்துக்குள் பணியை முடிக்க முடியவில்லை. தற்போது நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 31ம் தேதி 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில் அதற்குள் கட்டுமான பணிகளை முழுவதுமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது நாடாளுமன்ற புதிய கட்ட பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முழுவதுமாக முடியும் நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

புதிய படங்கள் வெளியீடு
இந்நிலையில் தான் தற்போது புதிய நாடாளுமன்றத்தின் படங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. Centralvista.gov.in எனும் இணையதளங்களில் படங்கள் வெளியாகி உள்ளன. அந்த படங்கள் பார்க்க மிகவும் பிரமாண்டமாக உள்ளன. கலைநுட்பத்துடன் சீலிங் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான படங்கள் தற்போது இணையதளதங்களில் வெளியாகி பொதுமக்களை கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications