ரூ.2000 அக்கவுண்ட்டில் வருது.. யாருக்கு பிஎம் கிசான் பணம் கிடைக்காது.. லிஸ்ட்ல உங்கள் பெயர் இருக்கா?
டெல்லி: பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளதாக தெரிகிறது. யார் யாரெல்லாம் பிஎம் கிசான் திட்டத்தில் பலன் பெற முடியாது? லிஸ்ட்டில் பெயர் உள்ளதா என எப்படி அறிவது? இவைகளை சுருக்கமாக பார்ப்போம்.
பிஎம் கிசான் எனப்படும் "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா" திட்டமானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காகவே மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதாகும். இந்த திட்டத்தின்கீழ், ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு வருடத்துக்கு மொத்தம் ரூ.6000 பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பணத்தில், விவசாயிகள் தங்கள் மானிய விலையில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம்..

யார் யாருக்கெல்லாம் பிஎம் கிசான் திட்டம் கிடைக்காது
நிறுவன நில உரிமையாளர்களும், அவர்களது குடும்பத்தில் எந்தவொரு அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள் பிரதம மந்திரி கிசான் உதவிக்கு தகுதியற்றவர்கள் ஆவர்.. அதேபோல, அரசு பணியில் உள்ளவர்கள், ஓய்வு பெற்றவர்கள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் அரசு தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள் போன்றோருக்கும் பிரதமர் கிசான் யோஜனா மானியம் கிடைக்காது.
மேலும், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற நிபுணர்களுக்கு இந்த உதவித்திட்டம் தரப்படாது.. மாதம் ரூ.10,000க்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்களும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களும் தகுதியற்றவர்கள், இந்தத் திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள் ஆவர்.. அதேபோல, குறிப்பிடப்பட்டவர்களின் பெயர்களில் விவசாய நிலம் இருந்தாலும், அவர்களும் இந்த திட்டத்தில் பலன் பெற முடியாது.
e-KYC முடித்திருப்பது நல்லது
இதுவரை 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம் இன்று வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. பிரதமர் கிசான் யோஜனாவிற்கு E-KYC செய்வது கட்டாயமாகிவிட்டது.. எனவே, இந்த உதவித்தொகையை வழக்கமாக பெறும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில் இ-கே.ஒய்.சி-யை செய்து முடித்திருக்க வேண்டும்.
தவணை விடுவிக்கப்பட்ட பிறகும், பல விவசாயிகள் தங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்று புகார் கூறுவதுண்டு... E-KYC நிறைவு செய்யாத விவசாயிகளின் கணக்குகளில் பணம் வராது என்பதால், e-KYC முடித்திருப்பது நல்லது.
தகுதியற்ற விவசாயிகள் பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என்பதால், கிசான் யோஜனாவின் தகுதியான பயனாளிகளின் பட்டியலில் இருக்கிறார்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.. ஒருவேளை பயனாளிகள் பட்டியலில் உங்களது பெயர் இல்லாவிட்டால், உடனடியாக வேளாண்மைத் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
அதேபோல, PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் கீழ் லிஸ்ட்டில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள விரும்பினால், கீழுள்ள வழிமுறைகளை பின்தொடர்ந்தாலே போதும்.
லிஸ்ட்டில் பெயர் உள்ளதா என எப்படி அறிவது
- முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in/ -க்குள் நுழைந்து லாக்-இன் செய்ய வேண்டும்
- கிசான் சம்மான் நிதி பிரிவுக்கு சென்று பயனாளி நிலை (Beneficiary Status) என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்போது உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்
- ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- பின்னர் Get Data என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்
- இப்போது திரையில் முழுமையான பட்டியல் தோன்றும். அதில், உங்கள் பெயர் உள்ளதா என்பதை செக் செய்யலாம்
பிஎம் கிசான் தவணை நிலையை செக் செய்வது எப்படி
- கிசான் யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in/ -க்குச் செல்ல வேண்டும்.
- 'Farmers Corner' -க்கு சென்று 'Know Your Status' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- விவசாயிகள் தங்கள் ஆதார் எண் அல்லது வங்கிக்கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணை இங்கு பதிவிட வேண்டும்
- இப்போது 'Get Data' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- இப்போது திட்டத்தின் நிலை (Status) திரையில் தோன்றும்
- இங்கு, விவசாயிகள் தங்கள் பணம் செயலாக்கப்பட்டதா? கணக்கிற்கு பணம் வந்துவிட்டதா? என்பது போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications