வடகிழக்கு ”இந்து” பழங்குடிகளை பாஜகவின் “கேடயங்களாக” மாற்றும் RSS- செம்ம ஸ்கெட்ச்.. பக்கா அஜெண்டா!
டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலத்தில் "இந்து" பழங்குடிகளை பாஜகவின் கேடயங்களாக வளர்த்தெடுக்கும் வகையில் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பல்வேறு செயல்திட்டங்கள் படுதீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இம்மாநிலங்களில் பழங்குடிகள்தான் அதிகம். பழங்குடிகளாக இருந்து கிறிஸ்தவர்களாக மதம் மாறியிருக்கின்றனர். கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியிருக்கிற போதும் பழங்குடிகளுக்கான சலுகைகளையும் பெற்று வருகின்றனர். பாஜகவோ நாட்டின் பிற மாநிலங்களில் கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் இந்துக்களிடம் இருந்து வேறுபடுத்தும் சித்தாந்தத்தைக் கொண்டது. இந்துக்களின் எதிரிகளே கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்கிற கோட்பாட்டை கட்டமைத்து வைத்துள்ளது. மேலும் பாஜக இந்து உயர் ஜாதியினருக்கான கட்சி என்ற பிம்பத்தையும் கொண்டது.

வடகிழக்கில் ஆர்.எஸ்.எஸ்: இத்தகைய பின்புலத்துடன் வடகிழக்கில் பாஜக அல்லது அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தால் எளிதில் ஊடுருவ முடியாது என்பது அதனது அனுபவம். ஏனெனில் நாடு விடுதலை அடைக்குப் பிந்தைய காலம் தொடங்கி தொடர்ச்சியாக வடகிழக்கு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பல்வேறு பெயர்களில் பல்வேறு நிறுவனங்களை களமிறக்கி பணியாற்றக் கூடிய இடம்தான் வடகிழக்கு மாநிலம். இத்தகைய அனுபவங்கள் மூலமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பெற்றுக் கொண்ட படிப்பினைகளில் ஒன்றுதான் வடகிழக்கில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பழங்குடிகளை இதர சோ கால்ட் இந்து பழங்குடிகளில் இருந்து அன்னியப்படுத்தி அணி திரட்டுவது என்பது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள்: இதற்காக கையில் எடுக்கப்பட்ட முதன்மையான முழக்கம்தான், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பழங்குடிகளை எஸ்டி பட்டியலில் இருந்து நீக்குக என்பது. Janajati Dharma-Sanskriti Suraksha Mancha, Indigenous Faith and Culture Protection Forum, Vanvasi Kalyan Ashram இவை அனைத்துமே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் துணை அமைப்புகள்தான். இந்த அமைப்புகள், நிறுவனங்களின் நோக்கமே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பழங்குடிகள், இந்து பழங்குடிகள் என்ற பிரிவினையை வலுப்படுத்துவதுதான். இதனாலேயே பழங்குடி மக்களுக்கான, மாணவர்களுக்கான பல்வேறு "சேவை"களை செய்வதற்காக ஆர்.எஸ்.எஸ்.-ன் அத்தனை அமைப்புகளும் களமிறக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்தவர்கள்: அத்துடன் நிற்காமல் கிறிஸ்தவ பழங்குடிகளுக்குள்ளும் ஊடுருவுவதையும் ஆர்.எஸ்.எஸ். இயல்பான அணுகுமுறையாக வைத்திருக்கிறது. தேர்தல்களில் கிறிஸ்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதில் தொடங்கி இத்தகைய போக்கை வெளிப்படையாகவே பின்பற்றுவதன் மூலம் இந்து உயர் ஜாதியினருக்கான கட்சி அல்ல பாஜக; அனைத்து மதத்தினருக்குமான கட்சியே பாஜக என்ற சிந்தனையை விதைத்து வாக்குகளை அறுவடை செய்வதையே பிரதானமாக கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.
மணிப்பூர்: மணிப்பூர் வன்முறையை எடுத்துக் கொண்டால் மேலோட்டமாக மைத்தேயி - குக்கி இனப் பழங்குடிகளுக்கு இடையேயான மோதலாக தெரியலாம். ஆனால் மைத்தேயி இனக் குழுவினர் இந்துக்களாகவும் குக்கிகள் கிறிஸ்தவர்களாகவும் பிளவுபடுத்தப்பட்டு மோதவிடப்பட்டுள்ளனர். இதனால்தான் குக்கிகளின் தேவாலயங்கள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன. குக்கிகள் வேட்டையாடப்பட்ட போது இந்திய நிலப்பரப்பு கொந்தளித்த போதும் அரச கட்டமைப்பு அமைதியாக இன்னமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய பெருநிலப்பரப்பில் இந்துக்களின் வாக்குகள் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டாதோ அதே போல வடகிழக்கு நிலப் பரப்பில் கிறிஸ்தவர்களை அன்னியப்படுத்தியும் ஊடுருவியும் கிறிஸ்தவர்கள் அல்லாத அனைவரையும் "இந்துக்களாக" "இந்து பழங்குடிகளாக" ஒருங்கிணைப்பதையே ஆர்.எஸ்.எஸ்.-ம் அதன் பரிவார கிளைகளும் இலக்காக கொண்டு தீவிரமாக இயங்கி வருகின்றன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications