தேசிய கொடியை நீங்க வைங்க பாப்போம்! ஆர்எஸ்எஸ்ஸை சீண்டிய சித்தராமையா? அடுத்த நாள் காலையில் பார்த்தால்?
டெல்லி : ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்படுமா? என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பிய நிலையில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் எனப்படும் ஆர்எஸ்எஸ்-ன் சமூக ஊடக கணக்குகளின் சுயவிவரப் ப்ரோபைல் பிக்சர்கள், அதன் பாரம்பரிய காவி கொடியிலிருந்து, தேசியக் கொடியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' எனப்படும், சுதந்திர தின அமுதப் பெருவிழாவனது கொண்டாடப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஆகஸ்ட் 2 முதல் 15ம் தேதிக்குள் மூவர்ண கொடியை பொதுமக்களும், பிரபலங்களும், சமூக வலைதளங்களில் சுயவிவரப் படமாக (ப்ரோபைல் பிக்சர்0 வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

பிரதமர் கோரிக்கை
பிரதமரின் இந்த கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் ஏராளமானவர்கள் தங்களது பேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளில் தேசியக் கொடியை ப்ரொபைல் பிக்சராக மாற்றியுள்ளனர். இதே போல பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று கேரளாவில் பெரும் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ,சுரேஷ்கோபி, இசையமைப்பாளர் கீரவாணியும், பாலிவுட் அக்ஷய்குமார், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் தங்கள் ப்ரொபைல் பிச்சர்களை மாற்றியுள்ளனர்.

காங்கிரஸ் விமர்சனம்
அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமூக வலைதளக்கணக்குகளில் தேசிய கொடி மாற்றப்படவில்லை.
மத்தியில் ஆளும் பாஜகவின் அரசியல் ஊற்றுக்கண்ணான ஆர்எஸ்எஸ், தேசியக் கொடி குறித்த அதன் நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக பேசிய கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, " தொடக்கத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசிய கொடியை ஏற்கவில்லை. அதுபற்றி பா.ஜனதா விளக்கம் கொடுக்கவில்லை. நமது தேசிய கொடி, அரசியல் சாசனத்திற்கு எதிராக அந்த அமைப்பினர் கருத்து கூறினர். நாக்பூரில் உள்ள அந்த அமைப்புன் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றினார்களா?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

தேசியக் கொடி
மேலும் நாக்பூரில் உள்ள தலைமையகத்தில் 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாத அமைப்பு, 'திரங்கா'வை சுயவிவரமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கைக்கு இணங்குமா என, ஆர்.எஸ்.எஸ். பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளிப்படையாக தாக்கினார். இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் எனப்படும் ஆர்எஸ்எஸ்-ன் சமூக ஊடக கணக்குகளின் சுயவிவரப் ப்ரோபைல் பிக்சர்கள், அதன் பாரம்பரிய காவி கொடியிலிருந்து, தேசியக் கொடியாக மாற்றப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.
மேலும் ஆர்எஸ்எஸ் நாடு முழுவதும் தனது அனைத்து அலுவலகங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என அந்த அமைப்பின் விளம்பரத் துறை இணைப் பொறுப்பாளர் நரேந்தர் தாக்கூர் கூறியுள்ளார். மேலும் ஆர்.எஸ்.எஸ்.ன் சமூக ஊடக கணக்குகள் அதன் சுயவிவரப் படத்தை அதன் நிறுவனக் கொடியிலிருந்து தேசியக் கொடியாக மாற்றியதாகவும், 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications