RSS: இதெல்லாம் தேவையில்லாத வேலை! அரசியலுக்காக பண்ணுறாங்க.. ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் பரபர பேச்சு
கொல்கத்தா: இந்தியா இந்து தேசம்தான் என்றும், கோயில்கள் அல்லது வழிபாட்டு தலங்களை அரசு கட்டக்கூடாது என்றும் மோகன் பகவத் பேசினார். மேலும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ ஹுமாயுன் கபீர், முர்ஷிதாபாத்தில் 'பாபர் மசூதி' என்ற பெயரில் ஒரு புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாகவும் மோகன் பகவத் பரபரப்பாக பேசியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இது தொடர்பான நிகழ்ச்சிகளில் அதன் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:-

இந்தியா இந்து தேசம் தான்
இந்தியா இந்து தேசம் தான். சூரியன் கிழக்கில் உதிக்கிறது; இது எப்போது இருந்து நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. எனினும், சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நமக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் ஒப்புதல் தேவையா?
அதுபோலத்தான்.. இந்தியா இந்து நாடு என்பதுதான் உண்மை. இந்தியாவைத் தாய்நாடாகக் கருதுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்தியப் பண்பாட்டைப் போற்றுகிறார்கள்; இந்துஸ்தான் மண்ணில் முன்னோர்களின் பெருமையை நம்பிப் போற்றும் ஒரே ஒரு மனிதர் உயிருடன் இருக்கும் வரை, இந்தியா ஒரு இந்து தேசமாகவே இருக்கும். இதுதான் சங்க் அமைப்புகளின் சித்தாந்தம் ஆகும்.
அரசியலமைப்பை திருத்த பாராளுமன்றம் ஒருவேளை முடிவு செய்தால் அந்த வார்த்தையை இணைக்க வேண்டும். அவர்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும் பிரச்சினை இல்லை. அந்த வார்த்தையைப் பற்றி நாங்கள் கவலைப்பட போவது இல்லை. ஏனெனில் நாம் இந்துக்கள்தான். நமது தேசம் இந்து தேசம். இதுதான் உண்மை.
வங்கதேசம் பிரச்சினை பற்றி
பிறப்பின் அடிப்படையிலான சாதி அமைப்பு என்பது இந்துத்துவாவின் அடையாளம் இல்லை" என்றார். வங்கதேசம் பிரச்சினை தொடர்பாக பேசிய மோகன் பகவத், இந்துக்கள் கண்டிப்பாக ஒற்றுமையாக இருக்க வேண்டும். சர்வதேச இந்து சமூகம் அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். சாத்தியமானவற்றை நாம் செய்கிறோம்.
எதிர்காலத்திலும் இன்னும் அதிகமாக செய்வோம். இந்தியா இந்துக்களின் நாடு. எனவே, அரசு இதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை பகிரங்கமாக சொல்ல முடியாது" என்றார்.
இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என
மேற்கு வங்கம் பற்றி பேசிய மோகன் பகவத், இந்துக்கள் ஒன்றுபடுவார்கள் என்றும், அதைத் தொடர்ந்து சமூக மாற்றம் ஏற்படும்" என்றார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முஸ்லீம்களுக்கு எதிரானது இல்லை என்று கூறிய மோகன் பகவத் மேலும் கூறுகையில், "நாங்கள் (ஆர்.எஸ்.எஸ்) இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற ஒரு பார்வை இருக்குமேயானால், நான் சொன்னது போலத்தான், ஆர்.எஸ்.எஸ் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குகிறது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம்" என்றார்.
பாபர் மசூதியை மீண்டும் கட்ட
தொடர்ந்து மோகன் பகவத் பேசுகையில், "மேற்கு வங்கத்தில் பாபர் மசூதியை மீண்டும் கட்டப்போகிறோம் என்று அடிக்கல் நாட்டுவது பிரச்சினையை மீண்டும் எழுப்பும் முயற்சியாகும். தீர்க்கப்பட்ட பிரச்சினையை மீண்டும் கிளப்ப அரசியல் சதி நடக்கிறது. வாக்குக்காக இது நடக்கிறது. ஹிந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் நலனுக்காக நடக்கவில்லை" என்றார்.
மேற்கு வங்கத்தில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ ஹுமாயுன் கபீர், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதியைப் போலவே ஒரு மசூதியை அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோகன் பகவத் இவ்வாறு பேசியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications