என்னது இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறோமா? ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் அப்படி செய்யாது.. மோகன் பகவத் பரபர பேச்சு
டெல்லி: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடஒதுக்கீட்டுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு மத்தியில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீட்டை எப்போதும் ஆதரிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் ஆர்எஸ்எஸ், பாஜக இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டினார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு செய்வது அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் திட்டம். ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டு வரும் 2025ஆம் ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் விளிம்புநிலை மக்களுக்கான இட ஒதுக்கீட்டை பாஜக நீக்கத் திட்டமிட்டுள்ளது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டினார்.
மேலும், இட ஒதுக்கீடு குறித்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் பலமுறை கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யத்தான் பாஜக 400 இடங்களில் வெற்றி என்ற இலக்கு நிர்ணயித்திருக்கிறது. பாஜகவின் இந்தத் திட்டத்தையும் சிலர் ஆதரிக்கின்றனர். எனவே, இந்தத் தேர்தல் SC, ST, OBC மக்களின் இட ஒதுக்கீடு தொடர வேண்டுமா என நிர்ணயிக்கும் தேர்தல் பேசினார் ரேவந்த் ரெட்டி.
2 கட்ட தேர்தல் முடிவை இப்பவே சொல்லட்டுமா? மோடி “சதம்” அடித்துவிட்டார்.. அமித் ஷா பரபர பேச்சு!
இந்நிலையில் இன்று ஒரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “இடஒதுக்கீட்டை ஆர்எஸ்எஸ் எதிர்ப்பதாக கூறப்படுவது பொய். இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்ததில் இருந்து, அரசியல் சாசனத்தின்படி இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ் முழுமையாக ஆதரித்துள்ளது.
இட ஒதுக்கீடு தேவைப்படும் வரை இடஒதுக்கீடு தொடர ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் ஆதரவாக இருக்கிறது என மோகன் பகவத் கூறியுள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே அண்மையில் எழுந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த கருத்தைக் கூறியுள்ளார்.
சமூகத்தில் பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று கடந்த ஆண்டு நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார். கண்ணுக்கு தெரியாததாக இருந்தாலும் சமூகத்தில் பாகுபாடு நிலவுகிறது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications