இந்தியா பாகிஸ்தான் போர்? குறுக்கே நுழைந்த ரஷ்யா.. இது எதிர்பார்க்காத ஸ்டேட்மென்ட்.. என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. சர்வதேச நாடுகள் இந்த மோதலை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேரடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்களை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.

நேரடியாக பாகிஸ்தான் உள்ளே புகுந்து ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தலாம். பாகிஸ்தான் இந்தியா எல்லையில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய எல்லையை தாண்டாமல் வான்வெளி தாக்குதல்களை விமானம் மூலம் நடத்த வாய்ப்புகள் உள்ளன. சில நாட்கள் திட்டமிட்டு அதன்பின் இதற்கு காரணமான தீவிரவாதிகளை மட்டும் என்கவுண்டர் செய்யலாம். அல்லது தீவிரவாதிகளுக்கு எதிராக போர் அறிவித்து ஒட்டுமொத்தமாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர் தாக்குதல்களை நடத்தி மொத்தமாக கேம்புகளை அழிக்கலாம்.

கடற்படையை பாகிஸ்தான் அருகே கொண்டு சென்று அங்கிருந்து தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். அதேபோல் ஏவுகணை தாக்குதல், விமான தாக்குதல்களை நடத்த முடியும் என்று கூறப்படுகிறது.

Russia makes huge statement in India Pakistan issue for the first time

இரண்டு நாட்டு மோதல்

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் கருத்து வேறுபாடுகளை அரசியல் மற்றும் ராஜதந்திர வழிமுறைகள் மூலம் இருதரப்பு ரீதியாக தீர்த்துக் கொள்ள வேண்டும். போர் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண நினைக்க கூடாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசிய லாவ்ரோவ், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் குறித்து பேசி உள்ளார்.

1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999 ஆம் ஆண்டு லாகூர் பிரகடனத்தின் விதிகளின்படி, புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை அரசியல் மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் மட்டுமே பேசி தீர்க்க வேண்டும். இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும்.

இரண்டு நாடுகளுக்குள்ளும் மோதல்கள் ஏற்பட கூடாது. பிராந்திய அமைதியை நிலைநாட்ட இவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். போர் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண நினைக்க கூடாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் தகவல்

இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்கும், காஷ்மீர் பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கும் தேவையான உதவிகளை செய்ய போவதாக அமெரிக்கா, இஸ்ரேல் உறுதி அளித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தூதர்கள் இன்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சவுத் பிளாக் அலுவலகத்திற்கு வந்தனர். இவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனைகளை மேற்கொண்டனர். இஸ்ரேலிய தூதர் ருவென் அசார், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை பற்றி பேசுகையில்.. இது மிக முக்கியமான தருணம். ஐஸ் உடைந்தது போன்ற முக்கியமான தருணம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. பல முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்தோம்.

இங்கு நடந்த பயங்கர தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம். நாங்கள் இந்தியாவுடன் நிற்கிறோம்; இது மிக முக்கியமான தருணம். நிச்சயமாக, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகிய இரண்டிலும் முக்கிய விஷயங்களை நாங்கள் விவாதித்தோம். சிறந்த ஒத்துழைப்பு வழங்கபோகிறோம், நாங்கள் சிறந்த பங்காளிகள், என்று கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள், இங்கே தீவிரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். இந்தியாவுடன் நிற்போம். இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்கும், காஷ்மீர் பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம். இந்தியா உடன் நாங்கள் நிற்கிறோம், என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+