உக்ரைன் விவகாரம்.. இந்தியாவின் நிலைப்பாடு என்ன.. குடியரசுத் தலைவரிடம் நேரில் விளக்கிய பிரதமர் மோடி!
டெல்லி: உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விவரிக்க பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை இன்று சந்தித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துவருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தையும் எந்த பலனும் அளிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் போரை தீவிரப்படுத்தி இருக்கிறது ரஷ்யா.
உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்தியர்கள் தொடர்ந்து அண்டை நாடுகளின் வழியாக மீட்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை ஒன்பது விமானங்களில் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி, டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விவரித்துள்ளார்.

ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய முதல்நாளே, உக்ரைன் நாட்டு அமைச்சர்கள் இந்தியாவை ரஷ்யாவிடம் பேச அழைத்தார்கள். இந்தியா சொன்னால் ரஷ்யா கேட்கும் என்ற நம்பிக்கையில் இந்தியாவின் உதவியை நாடினார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. போர் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவ வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது.

ரஷ்யா
அதோடு, ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபை தீர்மானம் கொண்டு வந்தது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் மற்றும் உக்ரைன் நட்பு நாடுகள் வாக்களித்தன. ஆனால் இதை இந்தியா புறக்கணித்தது. இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல் தவிர்த்தது. இந்தியா போல சீனாவும் வாக்களிக்காமல் இருந்தது.

மாணவர்கள்
இந்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் மீட்பு நடவடிக்கை தொடங்கியது. இந்தியாவில் இருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்புக்காக உக்ரைன் சென்றுள்ளார்கள். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதற்காக மத்திய அரசு நான்கு அமைச்சர்களை நியமித்து, அண்டை நாடுகள் வழியாக மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியது.
Recommended Video

குடியரசு தலைவர்
உக்ரைனில் இருந்து வாகனங்கள் வழியாகவோ, நடந்தோ பலர் உக்ரைன் எல்லையைக் கடந்து வருகின்றனர். அவர்களை மீட்டு இந்தியா அனுப்பி வருகிறது அரசு, இதுவரை 9 விமானங்களில் இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளனர். இது குறித்து விவரிக்கவே குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications