"டென்ஷன் வேண்டாம்.! நாங்க சீப்பாக தறோம்..!" இந்தியாவுக்கு அள்ளி கொடுக்கும் ரஷ்யா.. ஓ இதுதான் காரணமா
டெல்லி: தற்போதைய சூழலில் இந்தியாவும் சீனாவும் மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குகின்றன.
உக்ரைன் போர் சர்வதேச அளவில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டது. கொரோனாவில இருந்து மெல்ல மீண்டு வந்த சர்வதேச பொருளாதாரத்திற்கு அது அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது.
இந்தப் போர் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. உலகின் பல நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை வாங்கப் போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டன.

ரஷ்யா
இதனால் ஐரோப்பிய நாடுகளுக்குக் கடுமையான எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் ரஷ்யாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏனென்றால், ரஷ்யாவின் பொருளாதாரம் பெரும்பாலும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை மையமாக வைத்தே இருக்கிறது. இப்போது இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இது ரஷ்யப் பொருளாதாரத்தை இக்கட்டான சூழலில் தள்ளி உள்ளது.

இந்தியா
இந்தியா வழக்கமாக ஈராக், சவுதி அரேபியாவில் இருந்து தான் அதிக எரிபொருளை இறக்குமதி செய்யும். ஆனால், ரஷ்யா எப்படியாவது தனது கச்சா எண்ணெய்யை விற்க வேண்டும் என்பதால் சவுதியை விடக் குறைவான விலைக்கு இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய்யை வழங்குகிறது. குறைந்த விலை என்றால் எதோ ஓரிரு டாலர் இல்லை. கடந்த ஏப்ரல் ஜூன் காலகட்டத்தில் மட்டும் பேரல் ஒன்றுக்கு 19 டாலர் குறைவாக இந்தியாவுக்கு கொடுத்து உள்ளது.

இறக்குமதி
இதனால் ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் அளவு அதிகரித்து உள்ளது. கடந்த பிப் மாதம், ரஷ்யாவிடம் இருந்து மிகக் குறைவான அளவே கச்சா எண்ணெய் பெறப்பட்ட நிலையில், சில மாதங்களில் அது இந்திய இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலாக அதிகரித்து உள்ளது. இந்தியா இப்போது ஈராக்கிற்கு அடுத்தபடியாக ரஷ்யாவிடம் இருந்து தான் அதிக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.

இந்தியா & சீனா
உக்ரைன் போருக்குப் பின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில்லை. தற்போதைய சூழலில் இந்தியாவும் சீனாவும் மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குகின்றன. குறிப்பாக இந்தியா தனது தேவைகளில் 85% இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. இந்த நேரத்தில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைப்பது இந்தியாவுக்குப் பெரியளவில் உதவுகிறது.

மே மாதம்
கடந்த மே மாதமும் கூட ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் இந்தியா இறக்குமதி செய்தது.இதனால் முந்தை ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெய் 10 மடங்கு அதிகரித்து உள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் சவுதி அரேபியாவும் இப்போது தங்கள் இருப்பை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பத் தொடங்கி உள்ளது.

47.5 பில்லியன் டாலர்
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் காரணமாகக் கச்சா எண்ணெய் விலையும் தேவையும் குறைவாக இருந்தது. அப்போது இரண்டாம் காலாண்டில் 25.1 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு விலையும் தேவையும் அதிகரித்து உள்ளதால் 47.5 பில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications