வலிமை காட்டும் ரஷ்யா.. ஈரான் - இஸ்ரேல் மோதல் பெரிய போராகுமா? விமான விபத்தை கூறிய ஜோதிடர் கணிப்பு
டெல்லி: அகமதாபாத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 260க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த விமான விபத்தை முன்கூட்டியே கணித்து கூறிய பெண் ஜோதிடர் ஷர்மிஸ்தா தற்போது இஸ்ரேல் - ஈரான் மோதல் பற்றி கடந்த ஆண்டு கணித்து கூறியிருந்தார். அது அப்படியே நடக்கும் நிலையில் நேற்று முதல் மீண்டும் தொடங்கிய இஸ்ரேல் - ஈரான் மோதல் பெரிய போராகுமா? எப்போது முடிவுக்கு வரும்? இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் என்ன நடக்கும்? என்பது பற்றிய முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று இஸ்ரேல், ஈரான் அணு சக்தி கட்டமைப்புகள் மீது குண்டு மழை பொழிந்தது. அணு ஆராய்ச்சி கூடங்கள், யுரேனியம் செறிவூட்டும் மையம், ராணுவத்துக்கு சொந்தமான சுரங்க தளங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.

இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலை தாக்கி வருகிறது. இருநாடுகள் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே போர் உருவாகும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில் தான், அகமதாபாத் விமான விபத்தை சரியாக கணித்த பெண் ஜோதிடர் ஷர்மிஸ்தா இஸ்ரேல் - ஈரான் மோதல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர், ‛‛கடந்த ஆண்டு கணித்தபடி ஈரான் இறுதியாக போருக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்த ஈரான் - இஸ்ரேல் மோதல் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை.
தற்போது ஈரானில் நடக்கும் அரசு மாற்றப்பட்டவுடன் நிலைமை சரியாகும். அமைதி திரும்பும். ஆனால் அதற்குள் ஈரானின் பொருளாதாரம் பாழாகிவிடும். விரைவில் ரஷ்யா இந்த உலகத்திற்கு தனது பலத்தை காண்பிக்கும். மேலும் நேட்டோ நாடுகள் தாங்கள் யாரை சமாளிக்க வேண்டும் என்பதை உணரும்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஈரான் குறித்த கணிப்பை ஷர்மிஸ்தா வெளியிட்டு இருந்தார். அதில், ‛‛அடுத்த 2 ஆண்டுகளில் ஈரானின் பொருளாதாரம் சிதையும். ஈரானின் பவுண்டேஷன் சார்ட்டின் 2வது வீட்டில் கேது, ஜனன ராகு, சனி கடக்கிறது. இதனால் ஈரான் போருக்கு தள்ளப்படும். நம்பிக்கையுடன் அவர்கள் அதனை எதிர்க்க முடியும். கெஜ்ரிவாலைப் போல ஈரான் 2027க்கு பிறகு மீண்டும் பலம் பெற தொடங்கும். பல இஸ்லாமிய நாடுகள் ஈரானை கூட்டாக ஆதரிக்கத் தொடங்கும்'' என்று கூறியிருந்தார்.
தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் அதிகரித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கான உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நேற்று கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இருநாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் ஜோதிடர் ஷர்மிஸ்தா இஸ்ரேல் - ஈரான் மோதல் பெரும் போராக மாறாது. ஈரானில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தவுடன் மோதல் முடிவுக்கு வரும். ரஷ்யா தனது பலத்தை நிரூபிக்க உள்ளது என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் மோதலில் ரஷ்யா தற்போது ஈரான் பக்கம் உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலை ஈரான் கண்டித்துள்ளது. ஈரான் - ரஷ்யா இடையே நல்ல நட்பு உள்ளது. இதனால் ரஷ்யா ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கி இஸ்ரேலை ‛அட்டாக்' செய்ய உள்ளதா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முன்னதாக குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானம் பிஜே மருத்துவக்கல்லூரி விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் தீப்பிடித்து எரிந்தது. விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருவர் மட்டுமே இறந்தார். 241 பேர் பலியாகினர். விடுதியில் உணவு சாப்பிட்டவர்களும் பலியாகினர். பலி எண்ணிக்கை 260யை தாண்டி உள்ளது.
இதனை முன்கூட்டியே ஜோதிடர் ஷர்மிஸ்தா கருத்து தெரிவித்து இருந்தார். கடந்த டிசம்பர் மாதம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ''2025 ஆம் ஆண்டில் விமான விபத்து தொடர்பான தலைப்புச் செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தரக்கூடும். விமானப் போக்குவரத்து துறை வளரும். ஆனால் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்'' என கூறியிருந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே (ஜூன் 5 ஆம் தேதி) மற்றொரு பதிவில், ‛‛'2025 ஆம் ஆண்டில் விமான விபத்து குறித்த எனது கணிப்பை நான் இன்னும் உறுதியாக நம்பிக்கொண்டுதான் உள்ளேன்'' என்று கூறிய நிலையில் நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 260க்கு மேற்பட்டவர்களின் உயிரை பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications