ஒருத்தரையும் விடாதீங்க.. உங்களுக்கு தான் முழு ஆதரவு! மோடியிடம் உறுதியளித்த புதின்.. பாகிஸ்தான் பீதி
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேசிய நிலையில், கொடூரமான தாக்குதல் நடத்தியவர்கள், காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக புதின் உறுதி அளித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அமைதியை எப்படியாவது குலைக்க வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் பல்வேறு வழிகளில் சேட்டைகள் செய்து வருகிறது. எனினும் பாகிஸ்தானின் முயற்சிகள் அனைத்தையும் இந்தியா தவிடுபொடி ஆக்கி வருகிறது. எனினும் ஒருசில நேரங்களில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து அவர்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது.

26 பேர் பலி
அப்படி இந்தியாவின் சுற்றுலாவுக்கு சொர்க்கப்புரியான பஹல்காமில் பல மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருக்கும் போது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். அவர்களது கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா கடும் கோபமடைந்தது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
புதின் கடும் கண்டனம்
பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வரும் நிலையில் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி கூறுகையில் கூட நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மற்றும் உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்தை விரும்பவில்லை. அவர்களுக்கு எதிராக உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பயங்கரவாதிகள் ஒருத்தரையும் விடாதீங்க, உங்களுக்கு தான் இந்த விவகாரத்தில் முழு சப்பார் வழங்குவோம் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது பஹல்காம் தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார் என்றும் கூறியுள்ளது.
இந்தியாவுக்கு முழு ஆதரவு
மேலும் கொடூரமான தாக்குதல் நடத்தியவர்கள், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக புதின் உறுதி அளித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அலறிப்போயுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் அலறி வரும் பாகிஸ்தான் தற்போது மிரண்டு போயுள்ளது.
ஏற்கனவே பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போராடும் போது அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும். இதேபோன்று பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால் இந்த நாடுகளும் இந்தியாவுக்கே ஆதரவு அளிக்கும். இதனால் பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டாலும் கூட உலக நாடுகள் பல இந்தியாவுக்கு தான் ஆதரவு அளிக்கும் என்பது ஐயமில்லை.
போர் பதற்றம் அதிகரிப்பு
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எப்போது வெண்டுமானாலும் பாகிஸ்தான் மீது நம் நாட்டு பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தக் கூடும். முப்படை அதிகாரிகளை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தியது, பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கனவிலும் நினைக்காத அளவுக்கு பதிலடி இருக்கும் என்றும் மோடி தெரிவித்து இருக்கிறார். அடுத்தடுத்து இந்தியா எடுத்து வரும் நடவடிக்கையால் பாகிஸ்தான் அரண்டு போய் உள்ளது.












Click it and Unblock the Notifications