சட்டத்தை பின்வாசல் வழியாக பயன்படுத்துவதா?.. சபரிமலை வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்கிற நீதிமன்ற தீர்ப்புக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. மூத்த வழக்கறிஞர் சாய் தீபக் கோயில் வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியுமா என்று உச்ச நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதத்தில் ஈடுபட்டார். அடுக்கடுக்காக எழுப்பிய கேள்விகளால் நீதிபதிகள் ஆடிப்போயுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் நுழையலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மறுஆய்வு செய்ய கோரி பல்வேறு தரப்பில் இருந்து வழக்குகள் தொடரப்பட்டன. கோயில்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையில் நீதிமன்றம் தலையிட முடியாது. கடவுளை எப்படி வழிபடுவது என்பது பக்தர்களின் உரிமை என்று உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அமர்வு கூறியிருந்தது.

சபரிமலை கோயில் தீர்ப்பு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட வழக்கு விசாரணையில், மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பந்தளம் அரச குடும்பம், பக்தர்கள் அமைப்புகள் சார்பில் வழக்கறிஞர் சாய் தீபக் ஆஜரானார். கோயில் வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதை நிரூபிக்க அவர் 3 மணி நேரம் வாதாடினார்.
நீதிமன்றத்தில் சாய் தீபக், இந்திய அரசியலமைப்பின் 25 மற்றும் 26ஆம் கட்டுரைகள் மத சுதந்திரத்தையும், மத அமைப்புகள் தங்கள் வழிபாட்டு முறைகளை நிர்வகிக்கும் உரிமையை உறுதி செய்கின்றன. எனவே, ஒரு மதத்தின் பாரம்பரிய சடங்குகள் மற்றும் வழிபாட்டு நடைமுறைகளை நீதிமன்றம் பரிசீலனை செய்வது பொருத்தமல்ல.
சட்டத்தை பின்வாசலாக
ஒவ்வொரு கோயிலும் அந்தக் கோயிலின் தெய்வத்தின் தன்மை மற்றும் பழமையான மரபுகளின் அடிப்படையில் வழிபாட்டு முறைகளை பின்பற்றுகின்றன. பக்தர்கள் தங்கள் விருப்பப்படி வழிபாட்டு முறைகளை மாற்றக் கோர முடியாது. ஒரு மதத்தின் வழிபாட்டு முறையை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது. அது அந்த மதத்தின் அடையாளத்துடன் இணைந்த ஒன்று.
மத நடைமுறை மற்றும் புனித தன்மை நீதிமன்றத்தில் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. அந்த நடைமுறையை ஆய்வு செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு கிடையாது. நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாக செய்ய முடியாது. பகுத்தறிவு தன்மையை சோதிப்பதற்காக நீதிமன்றங்கள் சட்டத்தை பின் வாசல் வழியாக பயன்படுத்த கூடாது என்றார்.
நீதிபதிகள் கேள்வி
அதற்கு நீதிபதிகள், ஒரு நடைமுறை மதத்தின் பெயரில் பாதுகாக்கப்படுகிறதா அல்லது அது அடிப்படை உரிமைகளை மீறுகிறதா என்பதை யார் தீர்மானிப்பது. அரசின் ஒரு அங்கத்தை நீங்கள் விமர்சிக்கும்போதே நீதித்துறை மறு ஆய்வுக்கான அதிகாரம் வந்துவிடுகிறது. எல்லைகள் உள்ளன என்பதை புரிந்துள்ளோம். அதிகாரம் இல்லை என்பது தவறு என்றனர்.
அதற்கு சாய் தீபக், அரசு எல்லையை தாண்டினால் நீதித்துறை மறு ஆய்வு அவசியமாகிறது. எந்த மதப்பிரிவும் தீண்டாமையை பின்பற்றும் உரிமையை கோர முடியாது. சட்டம் என்ன சொல்ல வேண்டும் என்கிற பாதையில் நாம் செல்லும்போது, நாம் கொள்கை முடிவெடுக்கும் எல்லைக்குள் நுழைகிறோம் என்று வாதிட்டார். இதேபோல திருவிதாங்கூர் தேவஸ்வம் மற்றும் பல்வேறு பிரிவினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. வழக்கு இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications