இமாச்சல் சென்ற சைதை துரைசாமியின் ரத்த மாதிரி.. நாளை வெளியாகிறதா டிஎன்ஏ முடிவுகள்? வெற்றி எங்கே?
டெல்லி: சட்லஜ் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட மனித மூளையின் டிஎன்ஏவை சைதை துரைசாமியின் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டு பார்க்க அவருடைய ரத்த மாதிரிகள் இமாச்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி. இவர் என்றாவது ஒரு நாள் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் தனது தந்தையின் ஐஏஎஸ் அகாதெமியையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் த்ரில்லர் படத்தை இயக்கவிருந்தார். இதற்காக சிம்லாவில் ஷூட்டிங் எடுப்பதற்கான லொகேஷனை பார்க்க இமாச்சல் சென்றிருந்தார். உடன் அவருடைய உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் சென்றிருந்தார்.
அங்கு ஹோட்டலில் சாப்பிட்டு முடித்த வெற்றியும் கோபிநாத்தும் உள்ளூரில் பெரிய காரை எடுத்துக் கொண்டு ஓட்டுநர் டென்சினுடன் சிம்லா சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது கசாங் நலா எனும் பகுதியில் கார் சென்ற போது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்தது. இதையடுத்து தகவலறிந்த போலீஸார் ஆற்றுக்குள் விழுந்த காரை கயிறு கட்டி மீட்டனர். அதில் டென்சின் உடல் மீட்கப்பட்டது. கோபிநாத்தும் ஆற்றங்கரையில் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.
ஆனால் வெற்றியின் நிலைதான் தெரியவில்லை. அவரை 7 நாட்களாக தேடி வருகிறார்கள். ஆனாலும் கிடைக்கவில்லை, ஆழ்கடல் நீச்சல் வீரர்களை வைத்து 3 கி.மீ. தூரத்திற்கு தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. பாறை இடுக்குகளில் மூளை திசு கிடைத்துள்ளது. இது வெற்றியோடதா என அறிய டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த டிஎன்ஏவை வெற்றியின் தந்தையின் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காக அவருடைய ரத்த மாதிரிகள் சென்னையில் சேகரிக்கப்பட்டு இமாச்சலுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரத்த மாதிரியில் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளை வைத்துதான் வெற்றியின் நிலை தெரியவரும். இந்த டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications