என் மகள் நாட்டுக்கு பதக்கங்கள் பெற்று தந்தார்.. நீங்க என்ன செய்தீங்க சித்தார்த்? சாய்னா தந்தை கேள்வி
டெல்லி: என் மகள் இந்தியாவுக்காக விளையாடி பல பதக்கங்களை பெற்றுள்ளார். நடிகர் சித்தார்த் இதுவரை நாட்டுக்காக செய்த சாதனை என்ன என சாய்னா நேவாலின் தந்தை கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார்.
பாட்மிண்டன் வீராங்கனை சாய்நா நேவால், பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாபில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து கண்டனம் தெரிவித்ததுடன் இதை செய்தவர்கள் கோழைகள் என்றும் விமர்சித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி என்பவர் கட்சி, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அவர் நாட்டின் பிரதமர், அவருக்குரிய மதிப்பையும் மரியாதையையும் பாதுகாப்பையும் எப்போதும் சீர்குலைக்க கூடாது என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது. அதைத்தான் சாய்னாவும் வெளிப்படுத்தியிருந்தார்.

நடிகர் சித்தார்த்
இவரது ட்வீட்டை ரீட்வீட் செய்த நடிகர் சித்தார்த், சாய்னாவை ஆபாசமான வார்த்தைகளை கொண்டு கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் ஒரு பெண், இந்தியாவுக்கு தனக்கு விளையாட்டால் புகழையும் பெயரையும் பெற்று தந்தவர், என்ற எதையும் யோசிக்காமல் சாய்னாவை மிகவும் ஆபாசமாக ஒப்பிட்டிருந்தது அறுவறுப்பாக்கியது.

சித்தார்த் விளக்கம்
இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் தானாக வந்து புகார் அளித்தது. இதனால் சுதாரித்து கொண்ட சித்தார்த், தான் எந்த வித இரட்டை அர்த்தத்திலும் கூறவில்லை. தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றார். ஆனாலும் அவரது கருத்தில் அத்தனை ஆபாசம், அவதூறு, பெண் மீதான தவறான கண்ணோட்டம் உள்ளிட்டவைகளால் சித்தார்த்திற்கு எதிரான விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன.

சித்தார்த்தின் பங்களிப்பு என்ன
இந்த நிலையில் டைம்ஸ் நவ் நிறுவனத்திற்கு சாய்னாவின் தந்தை ஹர்வீர் சிங் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் எனது மகள் பாட்மிண்டன் விளையாடி நாட்டுக்கு பல பதக்கங்களையும் விருதுகளையும் குவித்து சாதனை புரிந்தவர். இந்த நாட்டிற்கு நடிகர் சித்தார்த்தின் பங்களிப்பு என்ன? சினிமா படத்தில் நடிப்பதை தவிர அவர் வேறு என்ன செய்தார்?

கண்ணீர் விட்ட சாய்னாவின் தந்தை
என் மகள் மீது சித்தார்த் அப்படி பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் மோசமானவை. இந்தியா ஒரு சிறந்த சமூகம். சாய்னாவுக்கு பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீரர்களின் ஆதரவு உள்ளது என்பதை நம்புகிறேன். ஏனென்றால் ஒரு விளையாட்டு வீரர் படும் கஷ்டங்கள் அனைத்தையும் அவர்கள் அறிவர் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
Recommended Video

சாய்னாவின் கணவர் கண்டனம்
அது போல் சாய்னாவின் கணவர் பருப்பள்ளி காஷ்யப்பும் நடிகர் சித்தார்த்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காஷ்யப் கூறுகையில் நடிகர் சித்தார்த்தின் ட்வீட் அவமானகரமானதாக உள்ளது. எங்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்துகளை சிறந்த நாகரீகமான வார்த்தைகளை கொண்டு வெளிப்படுத்தியிருக்கலாம். இந்த மாதிரியான மோசமான கருத்துகளை வெளிப்படுத்துவதுதான் நல்லது என நீங்கள் நினைப்பதாக நான் கருதுகிறேன். இதெல்லாம் நல்லதல்ல என கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications