டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பரபர விசாரணையில் ஹிஜாப் வழக்கு! சல்மான் குர்ஷித் காரசார வாதம்! குர்ஆன் ஜெராக்ஸ் கேட்ட உச்சநீதிமன்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஹிஜாப் வழக்கில், ஆஜரான மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷீத் நீதிபதிகளிடம் ஹிஜாப், புர்கா, ஜில்பாக் ஆகியவற்றுக்கான வேறுபாட்டை விளக்க புகைப்படங்களை காட்டினார்.

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.

அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

பிளாஷ்பேக்: சார்லஸுக்கு மன்னராகும் தகுதியில்லை.. மரணத்துக்கு முன் அரச குடும்பத்தை அதிர வைத்த 'டயானா’பிளாஷ்பேக்: சார்லஸுக்கு மன்னராகும் தகுதியில்லை.. மரணத்துக்கு முன் அரச குடும்பத்தை அதிர வைத்த 'டயானா’

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. கடந்த 3 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.

சல்மான் குர்ஷீத்

சல்மான் குர்ஷீத்

இந்த நிலையில் 2 நாள் ஒத்திவைப்புக்கு பிறகு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹிஜாப் தடைக்கு எதிராக வழக்கறிஞர் யூசுப் முச்சாலா மற்றும் மூத்த வழக்கறிஞரும் இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சல்மான் குர்ஷீத் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

குர்ஆன் பிரதிகள்

குர்ஆன் பிரதிகள்

மேலும் நீதிபதிகளை நோக்கி, "உங்கள் முன் இரண்டு குர்ஆன் பிரதிகள் உள்ளன." என்று சல்மான் குர்ஷீத் தெரிவிக்க, இந்த புனித புத்தகத்தை நாங்கள் வைத்திருக்க விரும்பவில்லை. அதன் பிரிண்ட் அவுட் காப்பி இருந்தால் கொடுங்கள் என்று நீதிபதி குப்தா கூற, நீதிபதிகளுக்கான நூலகத்தில் அது இருக்கும் என்றார். உடனே நீதிபதி குப்தா நூலகத்தில் ஒரு குர்ஆன் உள்ளது என்றார்.

புகைப்படங்களை காட்டிய குர்ஷீத்

புகைப்படங்களை காட்டிய குர்ஷீத்

இதனை தொடர்ந்து நீதிபதிகளிடம் ஹிஜாப், புர்கா, ஜில்பாப் ஆகியவற்றின் புகைப்படங்களை காட்டிய வழக்கறிஞர் சல்மான் குர்ஷீத், மூன்றுக்குமான வித்தியாசங்களை விளக்கினார். கலாச்சாரமே அடையாளமாக இருப்பதால் அது முக்கியம் என்றார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கை நாளை காலை 11:30 மணிக்கு ஒத்திவைத்தனர்.

English summary
In Hijab case Senior Advocate Khurshid shows the pictures of Burqa, hijab and jilbab to the supreme court judges to explain difference between them. he says thatCulture is important since culture leads to identity
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X