லென்ஸ் வெச்சும் படிச்சுட்டேன்.. பட்ஜெட்டில் அயோத்தியை காணோம்.. எம்.பி. அவ்தேஷ் பிரசாத்
டெல்லி: பட்ஜெட்டில் அயோத்தி முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் பைசாபாத் தொகுதி சமாஜ்வாதி எம்.பி. அவ்தேஷ் பிரசாத் புகார் தெரிவித்துள்ளார். மேலும், லென்ஸ் மூலமாகவும் பலமுறை பட்ஜெட்டை படித்துவிட்டேன் ஆனாலும் என் கண்ணில் அயோத்தி என்ற பெயர்கூட தெரியவில்லை. அயோத்தி பெயரில் அரசியல் செய்து பாஜக ஆதாயம் பெற்றுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 23 ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சித் தலைவர்கள் பங்கேற்று பேசினர். அப்போது, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன என்றும் மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உத்தரப்பிரதேச மாநிலம், பைசாபாத் தொகுதி சமாஜ்வாதி எம்.பி. அவ்தேஷ் பிரசாத் பேசுகையில், மத்திய பட்ஜெட்டில் அயோத்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று புகார் தெரிவித்தார். மேலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை நான் லென்ஸ் மூலமாகவும் பலமுறை படித்துவிட்டேன். ஆனால், அதில் அயோத்தி என்ற பெயர்கூட என் கண்ணுக்குத் தென்படவில்லை. அயோத்தியின் பெயரில் பாஜக அரசியல் செய்து ஆதாயம் பெற்றுள்ளது. அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதி பொதுத் தொகுதி. இருந்தாலும் அங்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த என்னை அகிலேஷ் யாதவ் போட்டியிட வைத்தார். அங்கு நான் வெற்றி பெற்றதாலேயே எந்தவொரு தொகையும் பாஜக அரசு அயோத்திக்கு ஒதுக்கவில்லை. மத்திய பொது பட்ஜெட்டில் அயோத்தி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கடவுள் ராமரின் ஆசியால் எனக்கு கிடைத்த இந்த வெற்றியால் அயோத்தி பொதுமக்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதே அரசால் சுமார் மூன்று தலைமுறைக்கு மேல் இருந்த வீடுகள் உள்பட பல பொதுமக்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இங்குள்ள நிஷாத் காலனி குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டு அப்பகுதியில் கடைகள் கட்டப்பட்டுள்ளன. அந்தக் கடைகள் பெரும் செல்வந்தர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்போது நிலத்தை வாங்குவதற்காக நில பேர ஊழலும் நடைபெற்றுள்ளது. ரூ. 2 கோடிக்கு வாங்கப்பட்ட சிறிய நிலம் அடுத்த 1 முதல் இரண்டு மணி நேரத்தில் ரூ. 18 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த நில பேர ஊழல்களை முறையாக விசாரிக்க குழு அமைக்க வேண்டும். 2027 சட்டப் பேரவைத் தேர்தலில் உத்திரப்பிரதேசத்தில் இருந்து பாஜக நிச்சயமாக வெளியேற்றப்படும். 2029 ஆம் ஆண்டு நாட்டின் ஆட்சியில் இருந்தும் பாஜக விலக்கி வைக்கப்படும் என்றார்.
அயோத்தியில் கடந்த ஜனவரி 22 ம் தேதியன்று ராமர் கோயில் திறக்கப்பட்டது. இதன் வாயிலாக மக்களவைத் தேர்தலில் அயோத்தியில் பாஜகவுக்கு பெரும் பலன் கிடைக்கும் என எதிர்பார்த்தது. ஆனால், 2019 தேர்தலில் உத்திரபிரதேசத்தின் 80 தொகுதிகளில் 62 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வி காரணமாக மத்திய பட்ஜெட்டில் அயோத்தி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications