சனாதன தர்மம் அவமதிக்கப்பட்டு இருக்கு.. ராகுல், உத்தவ் அமைதியா இருக்காங்க.. கிளறி விடும் பாஜக
டெல்லி: சனாதன தர்மத்தை அவமதிக்கும் முயற்சிகள் நடைபெற்று இருப்பதாகவும் ஆனால் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சிவசேனா (யுபிடி) உத்தவ் தாக்கரே இது பற்றி எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். எனவே, இந்த மாநாட்டுக்கு மிக பொருத்தமாக சனாதன தர்மம் ஒழிப்பு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சை திரித்து பாஜகவினர் பரப்பிய நிலையில் இது பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சு தொடர்பாக ஒட்டு மொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும்.
நான் சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, Genocide என நான் சொன்னதாக பைத்தியக்காரத்தனமாக சிலர் பேசுகிறார்கள். சனாதனம் கோட்பாடு ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். வேண்டுமென்று பாஜகவினர் போலி செய்தி பரப்புகின்றார்கள். இந்தியா கூட்டணி கூட்டம் வெற்றியடைந்ததை திசைதிருப்பவே பாஜகவினர் இப்படி செய்கின்றனர்" என்றார்.
இருந்தாலும் பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை வைத்து தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து தனிப்பட்ட கருத்து எனக் கூறி விலகிக் கொண்டது. குறிப்பாக மம்தா பானர்ஜி கூட சனாதன தர்மத்தை மதிப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஜூனியர் என்பதால் அவருக்கு இது தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாரிசில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி , தான் கீதை மற்றும் உபநிடதங்களை வாசித்து இருப்பதாகவும் பாஜக சொல்வது போல எதுவும் இந்து மதத்தில் இல்லை என்றும் கூறினார். இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அனுராக் தாகூர் கூறியதாவது:- சனாதன தர்மம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ராகுல் காந்தியும் உத்தவ் தாக்கரவேவும் அமைதியாக இருக்கிறார்கள். அதிகார பேராசையால் உத்தவ் தாக்கரே தற்போது இப்படி செய்து கொண்டு இருக்கிறார். பலரும் சனதான தர்மம் பற்றி பலரும் சொல்லிவிட்ட நிலையில் ராகுலும், உத்தவ் தாக்கரேவும் எதுவும் சொல்லவில்லை" என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications