முழு சங்பரிவாரமாகும் சசிகலா புஷ்பா... ஈரோடு ரயில் நிலையத்துக்கு பெரியார் பெயர் சூட்ட எதிர்ப்பு
Recommended Video
டெல்லி: ஈரோடு ரயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பாஜகவுக்கு தாவ தயாராக இருப்பதாக கூறப்படும் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கடும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளாராம்.
தெலுங்குதேசம் கட்சி ராஜ்யசபா எம்.பிக்களை வளைத்தது போல அதிமுகவின் 7 எம்.பிக்களை அள்ள பாஜக தயாராக உள்ளது. ராஜ்யசபா தேர்தல் நடைமுறைகள் முடிந்ததும் இந்த விளையாட்டு தொடங்க இருக்கிறது.

அதுவும் சசிகலா புஷ்பா எம்.பி.தான் இந்த கட்சித் தாவலுக்கு தலைமை வகிப்பவராக இருக்கிறார் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பாஜக எம்.பி.யை போலவே சசிகலா புஷ்பா செயல்பட்டு வருகிறார்.
மதிமுக பொதுச்செயலர் வைகோ ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகிவிட்டார். ஆனால் அவருக்கு ராஜ்யசபா தலைவர் பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் சசிகலா புஷ்பா.
இது தொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மோடியை மோசமாக விமர்சிக்கிறார் வைகோ; மோடியை தமிழர் விரோதியாக சித்தரிக்கிறார். மோடியை எதிர்ப்போருக்கு பாடம் கற்றுத்தர வேண்டும் என்றெல்லாம் பொங்கியிருக்கிறார். தற்போது தந்தை பெரியார் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் சசிகலா புஷ்பா.
லோக்சபாவில் நேற்று பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ஈரோடு ரயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் பேச திட்டமிட்டுள்ளாராம் சசிகலா புஷ்பா.
ஈரோடு ரயில் நிலையத்துக்கு திருப்பூர்குமரன் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளாராம். இப்படி பெரியாருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தமது பாஜக விசுவாசத்தை வெளிப்படுத்த முடியும் என்பது அவரின் திட்டமாம்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!











Click it and Unblock the Notifications