10 வருடம்தான்.. மாஸ்.. மொத்தமாக மாறிய கோவை டூ சேலம் பெல்ட்.. புட்டு புட்டு வைத்த சாட்டிலைட் படம்
டெல்லி: 10 ஆண்டுகளில் கோவை முதல் சேலம் வரை நகர்மயமாதல், பொருளாதார நடவடிக்கைகள் எப்படி உள்ளது என்பது குறித்து பொருளாதார சர்வேயில் சாட்டிலைட் படம் வைத்து விளக்கப்பட்டுள்ளது.
ஒரு நகரமோ மாநகரமோ மக்கள்தொகையில் அதிகரித்தால் அங்கு மக்கள் விரும்பி குடியேறுகிறார்கள் என்று அர்த்தம். இதற்கு காரணம் அந்த இடத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்புகளும் பெருகியுள்ளதாகவே அர்த்தம்.
மேலும் அந்த இடம் வாழ்வதற்கு ஏற்ற இடம் என்ற பொருளையும் கொடுக்கும். அந்த வகையில் கோவை முதல் சேலம் வரை நகர்மயமாதல் எப்படி உள்ளது என்பது குறித்த வரைப்படம் வெளியாகியுள்ளது.

கொள்கை உருவாக்குபவர்கள்
இந்தியாவில் உள்ள கொள்கை உருவாக்குபவர்கள் செயற்கைகோள் புள்ளி விவரங்களை தங்கள் பொருளாதார சர்வே 2021-2022 இல் பயன்படுத்தியுள்ளனர். அந்த வரைப்படத்தில் 10 ஆண்டுகளில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் என கொங்கு மண்டலம் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டதால் வெள்ளை நிறமாக ஒளிர்கிறது.

நகர்மயமாதல் பரவல்
இது நகர்மயமாதல் பரவுவதலையே காட்டுகிறது. மேலும் வங்கிக் கிளைகளும் அதிகரித்துள்ளதும் தெரிகிறது. இந்த வரைபடம் 2012 ஆம் ஆண்டு தமிழகம் எப்படியிருந்தது என்பதையும் 2022 ஆம் ஆண்டு தமிழகம் எப்படியிருக்கிறது என்பதையும் காட்டுகிறது. அதாவது 10 ஆண்டுகளில் எத்தகைய வளர்ச்சியை பெற்றுள்ளது.

கொங்கு பெல்ட்
இரவு நேரத்தில் வரைப்படத்தில் ஒளிர்வு ஏற்பட்டுள்ளதால் அந்த கொங்கு பெல்ட்டில் தொழிற்சாலைகளும் வீடுகளும் பெருகியுள்ளதையே காட்டுகிறது. ஆனால் 2012- ஆம் ஆண்டு இது குறைவாகவே இருக்கிறது. நகர்மயமாதலையொட்டி நிறைய வீடுகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.

சாலை வசதிகள்
எனவே தமிழகத்தில் சென்னை- மேற்கு மண்டலத்தை இணைக்க சாலை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். கோவைக்கு மெட்ரோ ரயிலும் அவசியமாகிறது. மக்கள் நெரிசல் அதிகமாக உள்ளதால் வாகன பயன்பாடுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டால் வேலைக்கு செல்லும் மக்களுக்கு பெரும் உதவியாக இருப்பதோடு சுற்றுச்சூழல் மாசடைவதையும் தடுக்கும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்டவை பனியன் தொழிற்சாலைகள், நூல் தொழிற்சாலைகள் இதர பிற ஆலைகள் அதிகம் உள்ள பகுதியாகும்.

வேலைவாய்ப்பு
இந்த தொழிற்சாலைகளில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகிறார்கள். உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்புகளை பெருக்கி தருகிறது. அது போல் தென் தமிழகமான மதுரை, ராமநாதபுரத்தில் தொழில் துறையில் வளர்ச்சிகள் அதிகரிக்க வேண்டும் என்பது வரைப்படத்தை பார்த்தால் தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications