டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாத்தான்குளம் சம்பவத்திற்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது - ப.சிதம்பரம்

சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணமடைந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கருத்து கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கருத்து கூறியுள்ளார்.
சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்பதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருந்த போது விதிகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்ததாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் மரணம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. போராட்டங்கள் வெடித்தன. கடைகளை அடைத்து வர்த்தகர்கள் அரசுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தந்தை மகன் மரணத்திற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருவரின் மரணத்திற்கு காரணமான போலீசார் உள்ளிட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஜீ ஜின்பிங்கும் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள்.. சீனத் துருப்புகள் ஊடுருவுகிறது.. ப.சிதம்பரம் சாடல் ஜீ ஜின்பிங்கும் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள்.. சீனத் துருப்புகள் ஊடுருவுகிறது.. ப.சிதம்பரம் சாடல்

தந்தை மகன் மரணம் சிபிஐ விசாரணை

தந்தை மகன் மரணம் சிபிஐ விசாரணை

இருவரின் மரணம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது. தந்தை, மகன் மரணத்திற்கு இழப்பீடாக அரசு சார்பில் 20 லட்சம் நிதி உதவி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறித்துள்ளார். இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சேலத்தில் அறிவித்தார். முதல்வரின் அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கை பிறந்திருக்கிறது

முதல்வரின் அறிவிப்பு குறித்து மத்திய முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

சிபிஐ விசாரணைக்கு வரவேற்பு

சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

ப.சிதம்பரம் கருத்து

1996 ஆம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதி மன்றம் வகுத்த விதிகளை மத்திய, மாநில காவல் துறைகள் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

English summary
EX Finance Minister P.Chidambaram post his twitter page, sathankulam custodial death The investigation of the Special Investigation Committee is better than the CBI investigation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X