காஷ்மீரில் நடக்கும் ஜி20 கூட்டத்தை ‘ஸ்கிப்’ செய்யும் சவுதி! இந்திய அரசுக்கு எதிர்ப்பாக புறக்கணிப்பு?
டெல்லி : ஜி-20 செயற்குழு உச்சி மாநாட்டுக் கூட்டம் ஸ்ரீநகரில் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இன்னும் தங்கள் வருகையை உறுதிப்படுத்தவில்லை. இதனால், சவுதி உள்ளிட்ட நாடுகள் இந்தக் கூட்டத்தை தவிர்க்கக்கூடும் எனத் தெரிகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஓர் எதிர்காலம் எனும் முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டின் பெருமையை உணர்த்தும் வகையில் பல்வேறு மாநிலங்களிலும் ஜி20 உச்சி மாநாட்டு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளை சார்ந்த தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

ஜி-20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை, அமைச்சர்கள் பங்கேற்ற ஜி20 கூட்டங்கள் ஏற்கனவே டெல்லி, கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரிலும் இந்த மாநாட்டு கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவெடுத்தது.
வரும் 22 முதல் 24ம் தேதி வரை தால் ஏரியின் கரையில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், ஜி20 நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்கு மொத்தம் 60 சர்வதேச பிரதிநிதிகள் இதுவரை பதிவு செய்துள்ளனர் என்று மத்திய சுற்றுலாத்துறை செயலாளர் அரவிந்த் சிங் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "இதுவரை மொத்தம் 17 ஜி-20 உறுப்பு நாடுகள் தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளன. சீனா, துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தங்கள் வருகையை பதிவு செய்யவில்லை" என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சீனா காஷ்மீரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தது. சர்ச்சைக்குரிய பகுதியில் மாநாடு நடத்துவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. காஷ்மீரில் நடைபெறும் மாநாட்டில் சீனா கலந்துகொள்ளாது என்று சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சீனாவை தொடர்ந்து துருக்கியும் இதில் பங்கேற்காது எனக் கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கியதில் துருக்கிக்கு மாற்றுக்கருத்து இருப்பதால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காது என்று சொல்லப்படுகிறது. மேலும், சவுதியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காது எனத் தெரிகிறது.
துருக்கி, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC) உறுப்பினர்களாக உள்ளன. அவை ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் இந்திய அரசின் முடிவை விமர்சித்தன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு கூட்டத்தை சவுதி அரேபியாவும் புறக்கணிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications