லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கின் விசாரணையை கண்காணிக்க நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்!
டெல்லி: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் 4 விவசாயிகள் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை கண்காணிக்க பஞ்சாப்-ஹரியானா நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக ஓரண்டாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் இதுவரை 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

லக்கிம்பூர் போராட்டம்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரிலும் கடந்த அக்டோபர் 3-ந் தேதி மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது உ.பி. துணை முதல்வர் மவுரியாவுக்கு கறுப்புக் கொடி காட்டும் வகையில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது சொகுசு கார் ஒன்று கூட்டத்துக்குள் திட்டமிட்டு ஏற்றப்பட்டது.

விவசாயிகள் படுகொலை
இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

அதிருப்தியால் நடவடிக்கை
உச்சநீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பின்னரே மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்ட பலரையும் உ.பி. போலீசார் கைது செய்தது. ஆனாலும் உ.பி. போலீசார் இந்த வழக்கு விசாரணையை ம் இகவும் தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன் தற்போதைய விசாரணை அதிகாரிகள் அனைவரும் இன்ஸ்பெக்டர்கள் நிலையில் உள்ளனர்; இவர்களுக்கு பதிலாக அதிகாரிகளை நியமிக்கவும் அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம்.

நீதிபதி நியமனம்
அத்துடன் இவ் வழக்கின் விசாரணையை கண்காணிக்க நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்றைய விசாரணையின் போது லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கின் விசாரணையை கண்காணிக்க பஞ்சாப்-ஹரியானாவின் ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ்குமார் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த திங்கள்கிழமையன்று இந்த வழக்கை 3 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் நடத்தும் விசாரணையை கண்காணிக்கவே தற்போது ஓய்வு பெற்ற நீதிபதியை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications