எஸ்.பி.வேலுமணி வழக்கை விசாரிக்க தடை இல்லை- தீர்ப்பு எங்கள் உத்தரவுக்கு கட்டுப்பட்டது: உச்சநீதிமன்றம்
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடை இல்லை; ஆனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்கள் உத்தரவுக்கு கட்டுப்பட்டது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தின் அசைக்க முடியாத ஆகப்பெரும் தூணாக இருந்தவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளுக்கான டெண்டர் வழங்கியதில் ஊழல் முறைகேடு நடந்தது; இதற்கு எஸ்.பி.வேலுமணிதான் காரணம் என்பது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு.
ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என வாதிடுகிறது எஸ்.பி.வேலுமணி தரப்பு. சென்னை உயர்நீதிமன்றத்தில் தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவில், தமக்கு எதிரான புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்று அறிக்கை வழங்கப்பட்டுவிட்டது; ஆனால் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆதாரம் இல்லை என்ற முதல் கட்ட அறிக்கைக்கு எதிராக அரசு, மனுதாரர்கள் வழக்கும் தொடரவில்லை என தெரிவித்திருந்தார்.

மத்திய அரசு வக்கீல் ஆஜர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், எஸ்.பி.வேலுமணியின் மனு விசாரணைக்கே ஏற்புடையது அல்ல என வாதிட்டார். அத்துடன் இந்த மனுவை ஒரு நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்றார். அத்துடன் எஸ்.பி.வேலுமணி தரப்பாக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ ஆஜராகவும் சண்முகசுந்தரம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தமிழக அரசு ஆட்சேபனை
இது தொடர்பாக வாதிட்ட தமிழ அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கின்றனர். இந்த சோதனை நடத்திய வருமான வரித்துறைக்காக வழக்குகளில் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் ராஜூ. அவர் எப்படி இந்த வழக்கில் ஆஜராக முடியும் என கேள்வி எழுப்பினார். ஆனால் மத்திய அரசின் அனுமதியுடன் தாம் ஆஜராவதாக வழக்கறிஞர் ராஜூ நியாயப்படுத்தி வாதிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு
இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி சார்பாக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ, மத்திய அரசு அனுமதியுடன் ஆஜராகி உள்ளார்; மத்திய அரசின் அந்த அனுமதி திரும்ப பெறப்படவில்லை. ஆகையால் ராஜூ ஆஜராவதை எதிர்க்கும் தமிழக அரசின் ஆட்சேபனை நிராகரிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ ஆவராவதை எதிர்த்த தமிழக அரசின் ஆட்சேபணையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இதேபோல் தம் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக வேலுமணியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்கலாம்; ஆனால் தீர்ப்பு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டது என தெரிவித்தனர். இது எஸ்.பி.வேலுமணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு?












Click it and Unblock the Notifications