ஜாதி ரீதியான இடஒதுக்கீட்டிற்கு.. காலக்கெடு விதிக்க முடியாது.. உச்ச நீதிமன்றம் அதிரடி.. மனு தள்ளுபடி!
டெல்லி: இந்தியாவில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு விதிக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் ஜாதி ரீதியான இடதுக்கீட்டை நீக்க வேண்டும் அல்லது புதிய பொருளாதார இடஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும் என்று பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும் மற்ற பல நீதிமன்றங்களிலும் தொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இது போன்ற வழக்குகள் ஒவ்வொரு முறை தள்ளுபடி செய்யப்பட்டாலும் புதிய கோரிக்கைகளோடு பல வழக்குகள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக பதியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டாக்டர் சுபாஷ் விஜய்ரன் என்ற மருத்துவர் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு முறைக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.
இந்தியாவில் பின்பற்றப்படும் ஜாதி ரீதியான இடஒதுக்கீட்டிற்கு காலக்கெடு விதிக்க வேண்டும். இன்னும் எத்தனை வருடங்கள் இந்த ஜாதி ரீதியான இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்று தேதி குறிக்கப்பட்டு கெடு விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எல் நாகேஸ்வர ராவ், ஸ்ரீபதி ரவீந்திர பாட் ஆகியோரின் அமர்வு விசாரணை செய்தது. மனுவை விசாரித்த சில நிமிடங்களில், இந்த மனுவில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை.
இந்த ஜாதி ரீதியான இடஒதுக்கீட்டிற்கு காலக்கெடு விதிக்க முடியாது, நாங்கள் மனுவை தள்ளுபடி செய்ய போகிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆனால் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ய போவதாக கூறியதை அடுத்து, டாக்டர் சுபாஷ் விஜய்ரன் தானாக தனது மனுவை வாபஸ் வாங்கினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications