டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 நாள்தான் டைம்.. விளக்கம் கொடுங்கள்.. காஷ்மீர் வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

ஜம்மு காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு7 நாளில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Supreme Court issues a notice to the Centre

    டெல்லி: ஜம்மு காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு7 நாளில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்படுவதற்கு முதல்நாள் இரவு அங்கு இணையம் துண்டிக்கப்பட்டது. அதன்பின் போன் இணைப்பு கேபிள் இணைப்பு எல்லாம் துண்டிக்கப்பட்டது. மொத்தமாக காஷ்மீரில் இருந்து இந்தியாவும், இந்தியாவில் இருந்து காஷ்மீரும் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    SC issues a notice to the Centre against media restrictions in Kashmir

    இந்த நிலையில் காஷ்மீரில் இப்போதும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. அங்கு இன்னும் இணைய இணைப்பு செய்து கொடுக்கப்படவில்லை. லேண்ட் லைன் போன் இணைப்பு மட்டும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    காஷ்மீரில் ராணுவமும் அதிக அளவில் குவிக்கப்பட்டு நிறைய கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. அங்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    காஷ்மீரை சேர்ந்த செய்தியாளர் அனுராதா பாஸின் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அதிக கவனம் பெற்றது. இந்த மனுவில் காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடுகள் அதிர்ச்சி அளிக்கிறது. அங்கு கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்ஏ நசீர் மற்றும் எஸ்ஏ போட்பே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. அதன்பின் அவர்கள் முக்கியமான உத்தரவை பிறப்பித்தனர்.

    SC issues a notice to the Centre against media restrictions in Kashmir

    அதில், காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நிலவுவது ஏன்?.ஒருவரை மற்றொருவர் சந்திப்பதில் என்ன தவறு. இந்திய குடிமகன்கள் நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும், பாதை அமைத்துக் கொடுப்பது அரசின் கடமை.

    காஷ்மீர் மக்களுடன் இந்தியாவின் பிற பகுதி மக்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். இந்தியாவின் பிறபகுதி மக்களுடன் காஷ்மீர் மக்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்.

    இதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதில் எந்த தவறும் இருக்க கூடாது, காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு7 நாளில் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    English summary
    Supreme Court issues a notice to the Centre against media restrictions in Kashmir .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X